Sunday, March 17, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? மேஷம் முதல் கன்னி வரை

    இந்த வார நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? மேஷம் முதல் கன்னி வரை

    மேஷம்: 

    மேஷ ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு ஓரளவு சுமாரான நாட்களாக அமைகின்றன. இந்த வாரம் முழுவதும் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முக்கிய முடிவுகள் எடுப்பதில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புகள் உண்டு. வேலைச்சுமை சற்று அதிகரிக்கும். சக அலுவலக நண்பர்களுடன் இணக்கமாக நடந்து கொள்ள வேண்டும். தொழிலில் ஓரளவு லாபம் இருக்கும். 

    ரிஷபம்: 

    ரிஷப ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு ஓரளவு நன்மைகள் நடைபெறும் நாட்களாக காணப்படுகின்றன. பொருளாதார நிலை திருப்திகரமானதாக இருக்கும். திருமண காரியங்கள் கைக்கூடி வரும். கடன் தொல்லை சற்று குறையும். பிள்ளைகளிடம் சற்று கனிவாக நடந்துகொள்வது நல்லது. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். தொழிலில் புதிய முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. 

    மிதுனம்: 

    மிதுன ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நாட்களாக காணப்படுகின்றன. பொருளாதார நிலைமை சீராக இருக்கும். கணவன்-மனைவி இடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி அன்பு அதிகரிக்கும். உறவினர்கள் வருகை மனமகிழ்வைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. அலுவலகத்தில் எப்போதும் நல்ல சூழ்நிலை நிலவும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வழிகள் பிறக்கும். 

    கடகம்: 

    கடக ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு மகிழ்ச்சியான நாட்களாக காணப்படுகின்றன. பொருளாதார நிலை நன்றாக இருக்கும். குடும்பத்தில் சில தேவையற்ற பிரச்சனைகள் தோன்றி மறையும். சில நேரங்களில் நிதானமாக இருப்பது அவசியம். அலுவலகத்தில் சற்று பொறுமையுடன் இருந்தால் நன்மைகளாக முடியும். தொழிலில் சற்று கூடுதலாக உழைக்க நேரிடும்.அதற்கான பலன்களும் கிடைக்கும். 

    சிம்மம்:

    சிம்ம ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக அமைந்து இருக்கின்றன. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களை பெருமை அடைய வைப்பார்கள். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியானதாக இருக்கும். அலுவலகத்தில் எப்போதும் போல் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். தொழிலில் நீங்கள் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்கும். 

    கன்னி: 

    கன்னி ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு சற்று நிதானத்துடன் நடந்துகொள்ள நாட்களாக இருக்கின்றன. குடும்பத்தில் சில தேவையற்ற பிரச்சனைகள் தோன்றி மறையும். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். தொலைதூரப் பயணங்களின்போது சற்று கவனமுடன் இருப்பது நல்லது. அலுவலகத்தில் உங்கள் ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்படும். தொழிலில் தன லாபம் அதிகரிக்கும். விற்பனை அமோகமாக நடைபெறும். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....