Sunday, March 17, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார நாட்கள் உங்களுக்கு பலன் கொடுக்குமா? மேஷம் முதல் கன்னி வரை

    இந்த வார நாட்கள் உங்களுக்கு பலன் கொடுக்குமா? மேஷம் முதல் கன்னி வரை

    மேஷம்: 

    மேஷ ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு ஓரளவு சுமாரான நாட்களாகவே இருக்கின்றன. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இருப்பினும் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பொறுமையைக் கடைபிடிக்க வேண்டிய நாட்களாக இந்த நாட்கள் உள்ளன. தந்தையுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். அலுவலகத்தில் சற்று கவனமுடன் இருப்பது அவசியம். தொழிலில் எப்போதும் போல் வரவு இருக்கும். 

    ரிஷபம்: 

    ரிஷப ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக காணப்படுகின்றன. பொருளாதர ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன்-மனைவி இடையே இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். சிலருக்கு சின்ன சின்ன செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. தொழிலில் சற்று கூடுதலான முயற்சி தேவை. அதே சமயம் உங்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். ஆடை, அணிகலன்கள் வாங்க வாய்ப்பு உருவாகும். 

    மிதுனம்:

    மிதுன ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு சுமூகமான நாட்களாக காணப்படுகின்றன. திருமண காரியங்கள் வெற்றிகரமாக முடியும். கணவன்-மனைவி இடையே அன்பு கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளால் உங்களுக்கு பெருமை வந்து சேரும். அலுவலகத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்தக் கூடிய நல்ல நேரம். தொழிலில் நல்ல முன்னேற்றமும் லாபமும் அதிகரிக்கும். சில எதிர்ப்பாராத நல்ல செய்திகள் உங்கள் காதுக்கு வரும். 

    கடகம்:

    கடக ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நல்ல மகிழ்ச்சியான நாட்களாக காணப்படுகின்றன. இருப்பினும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிறுவயது நண்பர்களின் சந்திப்பு உங்களுக்கு மன மகிழ்வைத் தரும். தந்தையுடன் நல்ல அன்பான உறவு நீடிக்கும். அலுவலக பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தொழிலில் சிலருக்கு சரியான லாபம் கிடைக்காது. இருப்பினும் விடாமுயற்சியுடன் செயல்படுவது வெற்றியை கொடுக்கும். 

    சிம்மம்: 

    சிம்ம ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு அதிக அளவில் நன்மைகள் நடைபெறும் நாட்களாக உள்ளன. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அலுவலகத்தில் தற்போது சுமூகமான நிலை காணப்படும். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். திருமண காரியங்கள் கைக்கூடி வரும் நல்ல நேரம் அமையும். 

    கன்னி: 

    கன்னி ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கும் இனிமையான நாட்களாக காணப்படுகின்றன. பொருளாதார நிலைமை சீராகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆன்மிக வழிபாடுகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். அலுவலகத்தில் சிலருக்கு பனிச்சுமை அதிகரிக்கும். இருப்பினும் உற்சாகமாக செயல்பட்டு காரியத்தை சாதிப்பீர்கள். தொழிலில் ஓரளவு லாபம் இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். 

    விராட் கோலியின் அசத்தல் சதத்தால் நல்ல ஸ்கோரை எட்டிய இந்தியா

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....