Sunday, March 17, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? மேஷம் முதல் கன்னி வரை

    இந்த வார நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? மேஷம் முதல் கன்னி வரை

    மேஷம்:

    மேஷ ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு உற்சாகமான நாட்களாகவே காணப்படும். குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அவை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. பயணங்கள் மேற்கொள்ளும்போது சற்று கவனமுடன் இருப்பது நல்லது. கணவன்-மனைவி இடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்பும் கூடும். தொழிலில் லாபம் கிடைக்க அதிகம் உழைக்க வேண்டும். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

    ரிஷபம்:

    ரிஷப ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக காணப்படுகின்றன. சில செலவுகள் இருந்தாலும் அதை நீங்கள் சமாளித்துவிடுவீர்கள். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகமாகும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கோபத்தை குறைப்பதன் மூலம் நல்ல காரியங்கள் கைக்கூடி வரும். நம்பிக்கையுடன் செயல்படுவதன் மூலம் எளிதாக காரியத்தை சாதிப்பீர்கள். 

    மிதுனம்:

    மிதுன ராசிக்காரர்களே, இந்த வார நாட்களில் நீங்கள் பரபரப்பாக செயல்படுவீர்கள். குடும்ப ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி உங்களை வந்து சேரும். அலுவலகத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். தொழிலில் புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக முடியும். கணவன்-மனைவி உறவில் அன்பு நீடிக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். புதிதாக நெருங்கி பழகுபவர்களிடம் கவனம் தேவை. 

    கடகம்:

    கடக ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக காணப்படுகின்றன. வெளியூர் பயணங்களால் உங்களுக்கு நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. திருமண காரியங்கள் கைக்கூடி வரும். பணவரவுக்கு எந்த குறையும் இருக்காது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருப்பினும் அதற்கேற்ற சன்மானம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த ஏற்ற நேரம். வாக்கு கொடுக்காமல் இருப்பது நல்லது. 

    சிம்மம்:

    சிம்ம ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு சற்று சுமாரான நாட்களாக காணப்படுகின்றன. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்பு உண்டு. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவது நன்மையளிக்கும். அலுவலகத்தில் சற்று குழப்பங்கள் வந்து சேரும். கணவன் மனைவி இடையே சில பிரச்சனைகள் தோன்றி மறையும். மனக்குழப்பங்களை தவிர்ப்பது நல்லது. 

    கன்னி:

    கன்னி ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் மகிழ்ச்சியான நாட்களாக காணப்படுகின்றன. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெற ஏற்ற நேரம். சிலருக்கு வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமுடன் செயல்படுவீர்கள். தொழிலில் சற்று கூடுதலாக உழைக்க நேரிடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கடன் பிரச்சனை சற்று குறையும். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.  

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....