சலித்துப்போனதா ஓட்ஸ் கஞ்சி? - அப்போ இதை செய்யுங்க!

ஓட்ஸை வைத்து தோசை சுடுவது எப்படி என்று இந்த ஸ்டோரியில் பார்ப்போம்

தேவையானப் பொருட்கள்: ஓட்ஸ் - 1 கப் அளவு. பச்சை பயிர் - 1/4 கப் அளவு. இஞ்சி - சின்ன துண்டு (தோல் சீவி நறுக்கியது). பச்சை மிளகாய் – 1 மல்லித்தழை – சிறிதளவு. உப்பு – தேவையான அளவு. சீரகம் – 1/2 ஸ்பூன். தயிர் – 1/4 கப் அளவு. தண்ணீர் – 1/2 கப் அளவு

ஓட்ஸ், பச்சைப்பயிர் - இரண்டையும் தனித்தனியாக ஏதேனும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.  பச்சைப்பயிர் குறைந்தது 6 மணி நேரமும், அதிகமாக 8 மணி நேரமும் ஊற வைக்க வேண்டும்.

செய்முறை:

ஓட்ஸ் இரண்டு மணி நேரம் ஊறினால் போதுமானது.  பின்பு பச்சைப் பயிர் ஊறவைக்கப்பட்ட தண்ணீரை வெளியே ஊற்றிவிட வேண்டும்.

இவ்விரண்டையும் மிக்சி ஜாரில் போட்டுக்கொண்டு எடுத்து வைத்த தேவையானப் பொருட்களை இதனுடன் கலந்து நன்கு அரைக்க வேண்டும்.  தோசை ஊற்றுவதற்கு ஏற்றவாறு அரைத்தால் போதுமானது.

இப்போது ஓட்ஸ் - பச்சைப்பயிர் தோசை மாவு ரெடி.  இயல்பாக தோசை செய்வதைப் போல தயார் செய்து கொள்ளலாம்.  இந்தத் தோசைக்கு பூண்டு சட்னி மற்றும் காரச் சட்னி மூடிக்கு ஏற்ற ஜாடி போன்று பொருத்தமாக இருக்கும்.