Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்அஜித்குமார் தந்தை மறைவு; இறுதிச்சடங்குக்கு ஒத்துழைக்க வேண்டுகோள் விடுத்த குடும்பம்..

    அஜித்குமார் தந்தை மறைவு; இறுதிச்சடங்குக்கு ஒத்துழைக்க வேண்டுகோள் விடுத்த குடும்பம்..

    எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம் என நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது சகோதரர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

    தென்னிந்திய நடிகர்களின் முக்கியமான நடிகராக விளங்கி வருபவர் நடிகர் அஜித்குமார். இவரின் தந்தை பி.சுப்ரமணியம். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாகவே பக்கவாதம் மற்றும் வயது மூப்பு காரணமாக ஏற்படும் தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.

    தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த பி.சுப்ரமணியம் இன்று காலை தனது 85-ஆவது வயதில் காலமானார். இது குறித்த தகவல் வெளியானதை அடுத்து சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களும், அஜித்குமார் ரசிகர்களும் அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், அஜித்குமார் மற்றும் அவரது சகோதரர்கள் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    மேலும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; 

    எங்களது தந்தையார் திரு. பி.எஸ்.மணி(85 வயது) அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார்.

    கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கரையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். 

    எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும், அற்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர். 

    தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம். 

    எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம். 

    இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    லியோ படத்தில் கதிரா? – யூடியூபர் இர்பான் வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் ஆச்சரியம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....