Wednesday, March 22, 2023
மேலும்
    Homeவாழ்வியல்உடற்பயிற்சி இல்லாமல், எளிதில் உடல் எடையை குறைக்க வேண்டுமா..?

    உடற்பயிற்சி இல்லாமல், எளிதில் உடல் எடையை குறைக்க வேண்டுமா..?

    நாம் உண்ணும் உணவு முறையிலேயே உடற்பருமனை எளிதில் குறைத்திடலாம். மனிதர்களுடைய உடல் எடை என்பது அவர்களுடைய பழக்கவழக்கங்கள்,வளர்சிதை மாற்றம் மற்றும் மரபியல் மூலமாகவே பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகின்றது. உடற்பருமன் மூலம் ஏற்படுகின்ற நோய்களிலுருந்து நம்மை தற்காத்து கொள்ள ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பது மிக அவசியம். எளிய உடற்பயிற்சிகள் மற்றும் நம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய இயற்கை உணவுகளான  காய்கனிகள் மூலம் உடல் எடையை குறைத்தால் எந்த விதமான பக்கவிளைவுகளும் ஏற்படாது.

    உடல் எடையை குறைத்திட அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள்:

    • பூசணியில் கலோரிகள் மிகவும் குறைவாக இருப்பதால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக சாப்பிடலாம்.
    • வயிற்றில் உள்ள கொழுப்பை கரைத்து, உடல் எடையை குறைக்க தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடலாம்.
    • உடல் எடையை குறைக்க நார்ச்சத்து நிறைந்துள்ள பசலைக்கீரையை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.
    • தினம் ஒரு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால், உடல் எடையை  குறைக்க உதவும்.
    • உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க தினந்தோறும் ஆப்பிள் சாப்பிடலாம்.
    • பல்வேறு வகையான அமிலங்களும், வைட்டமின்களும்  நிறைந்த ஸ்ட்ராபெர்ரி பழம் சாப்பிடுவதால் கொழுப்புகள் கரைவதோடு, மாரடைப்பு வராமல் தடுக்கும்.
    • சோளத்தில் பி காம்ப்லெக்ஸ் வைட்டமின்கள்,வைட்டமின் ஈ ஆகியவை நிறைவாக உள்ளன. எனவே இது செரிமானத்தை எளிதாகும்.உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதை சாப்பிட்டால், அதிக உணவு எடுத்துக் கொள்ள வசியம் ஏற்படாது.
    • தக்காளியில் உடலில் உள்ள கொழுப்புகளை கட்டுப்படுத்தும் சக்தி நிறைந்துள்ளது.
    • ஊட்டச்சத்து அதிகம் நிறைந்துள்ள பீட்ரூட்டில் கொழுப்பு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
    • முலாம் பழத்தில் உள்ள நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவும்.
    • உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் மாதுளையை தினமும் சாப்பிட்டு வரலாம். மாதுளை உடலில் ஆற்றலை அதிகரித்து எப்பொழுதும் சுறுசுறுப்புடன் இருக்க உதவும்.

    தவிர்க்க வேண்டிய உணவு முறைகள்:

    • குளிர் பானங்கள்.
    • குக்கீஸ், கேக்.
    • பிட்சா. 
    • ஐஸ் க்ரீம்.
    • சாக்லேட்.
    • உருளைக்கிழங்கு சிப்ஸ்.
    • எண்ணெயில் பொறித்த உணவுகள்.

    இயற்கையாக கிடைக்கும் புரதச்சத்துகளை  உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால்  தசைகள் வலுவாகி, உடல் எடை குறையும்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    bjp leader

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி- பாஜக அண்ணாமலை

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  இந்த ஆண்டுடின் முதல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர்...