Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்லியோ படத்தில் கதிரா? - யூடியூபர் இர்பான் வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் ஆச்சரியம்

    லியோ படத்தில் கதிரா? – யூடியூபர் இர்பான் வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் ஆச்சரியம்

    பிரபல யூடியூபர் இர்பான் லியோ படக்குழு தங்கியிருக்கும் ஹோட்டலில் எடுத்து வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    நடிகர் விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் படம்தான், லியோ. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நடிகர் விஜய்யுடன், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ் மற்றும் மன்சூர் அலிகான் போன்றோர் நடித்து வருகின்றனர்.

    இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுகளும் இணையத்தில் வைரலாகின. தற்போது, காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே, காஷ்மீர், டெல்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகினர். 

    இதைத்தொடர்ந்து, நிலநடுக்கம் குறித்து லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சந்திரமுகி படத்தில் பங்களாவிற்குள் செல்லும் வடிவேலு பயந்து நடுங்கும் வீடியோவை பகிர்ந்து ‘நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் நண்பா’ என்று பதிவிட்டது இணையத்தில் வைரலானது.

    இந்நிலையில், பிரபல யூடியூபர் இர்பான் விஜய்யின் ‘லியோ’ படக்குழு தங்கியிருக்கும் ஹோட்டலில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து நடந்த சம்பவங்களை வீடியோவாக்கி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    மேலும், இர்பான் வெளியிட்ட வீடியோவில் நடிகர் கதிர் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. லியோ படத்தில் கதிர் நடிப்பது குறித்து இதுவரை ஏதும் அறிவிக்கப்படாத நிலையில், வீடியோவில் லியோ படக்குழுவுடன் கதிர் இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    முன்னதாக, லியோ படக்குழு காஷ்மீர் அனுபவம் குறித்து வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    ‘அகநக அகநக முகநகையே’ – 60 லட்சம் பார்வைகளைத் தாண்டும் பொன்னியின் செல்வன்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....