Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்விஷு பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறதென தெரியுமா? - காரணங்கள் உள்ளே!

    விஷு பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறதென தெரியுமா? – காரணங்கள் உள்ளே!

    விஷுக்கனி பண்டிகையை மலையாளம் பேசும் மக்கள் கொண்டாடுகின்றனர். ஆண்டு தோறும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் (சித்திரையில்) இத்திருநாள் கொண்டாடப்படுகிறது. 

    விஷுக்கனி பொருள்: 

    விஷு என்பதற்கு சமஸ்கிருதத்தின் படி சமம் என்று பொருளாகும். விஷு பகவான் இந்நாளில் தான் இராசி கிரகங்களின்படி முதல் ராசியான மேஷத்துக்கு வருவதாக கூறப்படுகிறது. மேலும் விஷு எல்லா இராசிகளுக்கும் முதன்மையானவர் என்பதால் இவரை ஆண்டு வழிபாடு செய்கின்றனர். மேலும் கனி என்பது காண என்பதைக் குறிக்கும். 

    விஷுக்கனி  கொண்டாடக் காரணம்:

    விஷு கொண்டாட முக்கிய மூன்று காரணங்கள் கூறப்படுகின்றன. 

    • இந்த நாளில் தான் சூரியன் நேராக கிழக்கு திசையில் உதிக்கிறார் என்று ஒரு ஐதீகம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 
    • இராவணன் சூரிய வெளிச்சம் படுவதால், அவனை தடுத்தி நிறுத்தி  வைத்ததாகவும் இராம இராவண யுத்தத்திற்கு பிறகு இராவணன் இறந்ததும் அந்த சூரியன் உதித்த நாள், இந்நாள் தான் என்றும் ஒரு ஐதீகம்.
    • கேரள மக்களின் அறுவடை காலத்தில், அதாவது வசந்த காலத்தின் தொடக்கமாக இந்நாள் இருப்பதால் விஷுவை வழிபாடு செய்வதாக ஒரு ஐதீகம். 
    வழிபாடு செய்யும் முறை: 

    இந்த விஷுக்கனி வரும் முதல் நாளே வீடு வாசல் என அனைத்தையும் சுத்தப்படுத்துவர். பூஜை அறையில் புதிய பட்டாடை அல்லது சாதரண ஆடையை வைத்து அதன் மேல் கிருஷ்ண சிலையை முதன்மையாக வைப்பர். ஐந்து திரிகள் கொண்ட விளக்கில் நெய் அல்லது எள்ளு எண்ணெய்யை ஊற்றி வைப்பர்.

    மேலும் ஒரு வெண்கல பாத்திரத்தில் நெல் மணிகளையும் அரிசையையும்  முதலில் கொட்டி அதன் மேல் வெள்ளரிக் கனி, செவ்வாழை பழம், மாங்கனி, கொய்யாக்கனி, பலாக்கனி, திராட்சைக்கு கனி, பூசணிக்காய், தேங்காய் போன்ற காய்கள் மற்றும் பழங்கள் அனைத்தும் வைப்பர். மிக முக்கியமான ஒன்றாக கொன்றை மலர்களை பாத்திரத்தில் வைப்பர். மேலும் குறிப்பாக கண்ணாடியும் புது துணியையும் வைப்பர். 

    லட்சுமி வரவிற்கு, 

    புத்தாடை மேல் வெற்றிலை பாக்கு, தங்க நாணயம், காசுகள் வைத்து வழிபாடு செய்வர். இன்னொருபுரம் நவ தானியங்கள் வைத்தும், சொம்பில் தண்ணீர் மற்றும் வெள்ளை நிற பூக்களை சேர்த்தும் வைப்பர். கிருஷ்ணரை நன்கு அலங்கரித்து பூமாலை அணிவித்து அழகுபடுத்துவர். 

    விஷுக்கனி காணல்:

    அந்நாள் இரவு, வீட்டின் மூத்த பெண்கள் யாரேனும் பூஜ அறையில் படுத்து உறங்குவர். மேலும் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் விளக்கினை ஏற்றி உலோகக் கண்ணாடி வழியே தங்களது முகத்தைக் காண்பர். பின்பு வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் எழுப்பி அவ்வாறு காண வைப்பர். 

    விஷுக்கனி காண்பதற்கான காரணம் அந்த ஆண்டு எல்லாவித நன்மையையும் கிடைப்பதற்காகவே. இப்படி செய்வதன் மூலம் தான் வாழ்க்கை வளம்பெறும் என்று நம்புகின்றனர். 

    சிறப்பு உணவு: 

    சிறப்பு உணவாக மாங்காய் பச்சடி அல்லது வெள்ளரி பச்சடி  செய்வர். இதில் அறுசுவையையும் சேர்த்து பகிர்வர். 

    அரிசி, தேங்காய்ப்பால், மற்றும் நறுமண பொருள்கள் கொண்டு கஞ்சி செய்வர். இதற்கு தொட்டுக்கொள்ள தோரன் என்ற உணவு செய்யப்படுகிறது. 

    கைநீட்டம்: 

    குழந்தைகளுக்கு பெரியவர்கள், தாய், தந்தை, பாட்டி, தாத்தா என அனைவரும் இந்த கைநீட்டை கொடுப்பர். கைநீட்டம் என்பது காசு பணத்தை தருவதாகும். மேலும் பணக்காரர்கள் ஏழை எளிய மக்களுக்கு இந்நாளில் கைநீட்டம் தந்து உதவுவர். குழந்தைகள் அனைவரும் பெரியவர்களின் கால்களில் விழுந்து ஆசிப்பெற்று கைநீட்டத்தை பெறுவர். 

    பட்டாசு: 

    இந்நாளில் பட்டாசு வெடித்து, தங்களின் மகிழ்ச்சியை குழந்தைகள் வெளிப்படுத்துவர். மேலும் காலையில் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வர். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....