Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்"அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்" விண்ணைத் தாண்டி வருவாயா ஸ்பெஷல்!

    “அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்” விண்ணைத் தாண்டி வருவாயா ஸ்பெஷல்!

    உலகம் முழுவதும் பரவியுள்ள மானுட குலத்தில் நிகழும் காதல் கதைகளின் எண்ணிக்கை பற்பல. என் காதல் கதை உன் காதல் கதையை போன்றுதான்  என்று கூற முடியுமே தவிர உன் காதல் கதையும் என் காதல் கதையும் ஒன்றுதான் என்று கூற இயலாது. மனித பிறப்புக்களை போன்றுதான் காதலும்! எந்த ஒரு காதலும் மற்றோரு காதலுடன் 100 விழுக்காடு பொருந்திப்போவதில்லை! பொருந்தவும் செய்யாது!நம்மிடத்தில் 100 விழுக்காடு பொருந்திப்போகவில்லை எனினும், நம் காதலை நினைவு படுத்தி அல்லது இப்படியாகத்தான் நம் காதல் இருக்க வேண்டும் என்று ஆசையை ஏற்படுத்தும்படி ஒரு காதலை நாம் நம் வாழ்வில் கண்டிருப்போம்!  அப்படியான ஒரு காதலை நம்முன் காண்பித்த திரைப்படம்தான், விண்ணைத்  தாண்டி வருவாயா!

    vtv

    விண்ணைத் தாண்டி வருவாயா வெளிவந்து இன்றுடன் பன்னிரண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. கார்த்திக்-ஜெஸ்ஸி இருவருக்கும் இடையில் நேர்ந்த காதல், நமக்குள் இருந்த காதலின் பிம்பத்தை அசைக்கும் வல்லமை படைத்தது. பலருக்கு இதுதான் காதல் என நினைத்திருந்த நினைப்புகளை தவிடுபிடியாக்கியது, விண்ணைத்  தாண்டி வருவாயா!

    vtv

    கார்த்திக்கும் சரி ஜெஸ்ஸியும் சரி நமக்கு பழக்கப்பட்டவர்களாக தோன்ற அதீத வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் முற்றிலும் புதியதாய் நமக்கு தோன்றவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஏதோ ஒரு புள்ளியில் அவர்கள் இருவரின் குணங்களும் நம்மின் எண்ண ஓட்டத்தோடு ஒன்று படும் மாயத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய விண்ணைத்  தாண்டி வருவாயா பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பே நிகழ்த்தியது.

    தொலைதூரத்தில் இருக்கும் வெளிச்சமாய் காதல் இருக்க கார்த்திக்கும் ஜெஸ்ஸியும் அந்த வெளிச்சத்தால் கவர்ந்திழுக்கப் படுகின்றனர். அந்த வெளிச்சத்தை அடையும் முன்பே, அடையும் வழியிலேயே நேரும் இருளை முடிந்த அளவு சரி செய்கிறார்கள். சரி செய்துகொண்டே காதலின் வெளிச்சத்தில் நகர்கிறார்கள்.

    vtv

    இன்னல்களை தாண்டி, இருவரும் காதலில் விழ காற்றிலே ஆடும் காகிதமாக இருந்த இருவரும் அழகிய காதல் கவிதைகளாக நமக்கு தென்பட்டனர். இவ்வளவு வருடங்கள் கழித்து விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தை பார்த்தாலும் இருவரும் அழகிய காதல் கவிதைகளாகவே நமக்கு தெரியும் மாயத்தினை என்னவென்று சொல்ல?

    காலப்போக்கில் தவறவிட்ட வரமாக கார்த்திக்கு ஜெஸ்ஸியும், ஜெஸ்ஸிக்கு கார்த்திக்கும் மாறவேண்டிய காலம் ஏற்பட்ட போதிலும் மோதல்கள் நிகழாமல், சூழல்களை புரிந்து கார்த்திக்கும் சரி ஜெஸ்ஸியும் சரி வாழ்வில் பயணப்பட ஆரம்பித்தது அப்போது மட்டும் அல்ல இப்போதும் விந்தைதான்!

    விட்டு சென்ற காதலை குறை கூறாமல் “உன்னால்தான் நான் கலைஞனாய் ஆனேனே!” என காதலை இறுதியில் நிலை நிறுத்திய விதம்தான் படத்தின் உச்ச உணர்வு! 

    vtv

    விண்ணைத்  தாண்டி வருவாயா ஏற்படுத்திய தாக்கத்தை, கூறிய பாடத்தை, தெரிவித்த  ஒரு வரியில் கூற வேண்டுமாயின் படத்தின் பாடலில் வரும் ஒற்றை வரிதான் நியாபகம் வருகிறது,  அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....