Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து நகர்ப்புற தேர்தல்களிலும் வெற்றிப் பெற்ற விஜய் மக்கள் இயக்கம்!

    உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து நகர்ப்புற தேர்தல்களிலும் வெற்றிப் பெற்ற விஜய் மக்கள் இயக்கம்!

    தமிழகத்தில் மிகவும் பரபரப்பாய் நகர்ந்து வந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தனது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. கடந்த பத்தொன்பதாம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதன்முறையாக விஜய் அவர்களின் மக்கள் இயக்கம் சுயேட்சையாக களம் கண்டது. 

    இதற்கு முன்னம் தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட்ட நடிகர் விஜய் அவர்களின் விஜய் மக்கள் இயக்கம் 129 இடங்களில் வெற்றி வாகை சூடியது. உள்ளாட்சி தேர்தல்களில் கிடைத்த வெற்றியின் நம்பிக்கையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் இயக்கம் போட்டியிட்டதாக கூறப்படுகிறது.

    vijay makkal iyakkam win

    இந்நிலையில், இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பெரும்பாண்மையான இடங்களில் ஆளுங்கட்சியான திமுக வெற்றி வாகை சூடிக்கொண்டிருக்கிறது. 

     

    இப்படியான சூழலில், விஜய் மக்கள் இயக்கம் தற்போது வரை 4 வார்டுகளில் வென்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை சமூக வலைத்தளங்களில் விஜய் இரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    vijay makkal iyakkam

    இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபாத் நகராட்சி 3வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட மோகன் ராஜ் அவர்களும், குமாரபாளையம் நகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட வேல்முருகன் அவர்களும்,  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி 16-வது வார்டில் போட்டியிட்ட மணிமாலா சிலம்பரசன் அவர்களும் புதுக்கோட்டை நகராட்சி 4-வது வார்டில் போட்டியிட்ட பர்வேஷ் முகமது அவர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....