Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்அரபிக்குத்து இரண்டு கோடி முறை பார்க்கப்பட, விஜய்யை கண்டு வியத்தல் நிகழ்கிறது! - பாராட்டு மழையில்...

    அரபிக்குத்து இரண்டு கோடி முறை பார்க்கப்பட, விஜய்யை கண்டு வியத்தல் நிகழ்கிறது! – பாராட்டு மழையில் தளபதி!

    பிப்ரவரி 14 காதலர் தினம் என பலர் காதலர் தினத்தை கொண்டாடி கொண்டிருக்கையில், தளபதி விஜய் இரசிகர்கள் மற்றும் பலரும் அன்றைய தினத்தை அரபிக்குத்து தினமாகவே கொண்டாடினர். பல திரையுலக பிரபலங்களுமே அன்றைய தினத்தை அரபிக்குத்து தினமாகவே கொண்டாடினர். 

    beast

    அரபிக்குத்து – தென்னிந்திய சினிமா இரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் பீஸ்ட் திரைப்படத்தில் இருந்து வெளிவந்திருக்க கூடிய பாடல்! தளபதி விஜய் நடிக்க, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வர தயாராகிக் கொண்டிருக்கிறது.

    vijay

    அனிருத் இசையமைக்க, சிவகார்த்திகேயன் அவர்கள் பாடல் வரிகளை எழுதுவதே பாடலின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க, அரபிக்குத்து பாடலுக்காய் வெளியிடப்பட்ட புரோமோ பாடலின் மீதான அதிகரிப்பை இன்னும் அதிகரிக்கச் செய்தது.

    இப்படியான எதிர்பார்ப்புகளுடன் நேற்று வெளியாகிய அரபிக்குத்து பலரிடத்திலும் ஹிட் அடிக்க, விஜயின் லுக்குகளும், நடன அசைவுகளும் நல்ல வரவேற்பை அனைவரிடத்திலும் பெற தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 

    beast song பலர் பாடலின் வரிகள் புரியவில்லை என்றாலும், புரியாத வார்த்தைகள் கூட தற்போது அனைவராலும் முணுமுணுக்கப்படுகிறது. பாடலாக பொறுத்தமட்டில் கலவையான விமர்சனங்களையே அரபிக்குத்து பெற்று வருகிறது. இருபது மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ள அரபிக்குத்து பாடல் குறித்து பல திரையுலக பிரபலங்களும் தங்களின் கருத்துகளை, தங்களின் விருப்பங்களை, குறிப்பாக தளபதி விஜயின் நடனத்தை குறித்து பதிவு செய்து வருகின்றனர். 

    அவ்வாறான பதிவுகளில் சிலவற்றை இங்கே காண்போம்;

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....