Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்உளவியல் ரீதியாக பார்க்கும் போது ஆண்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா?

    உளவியல் ரீதியாக பார்க்கும் போது ஆண்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா?

    ஆண்கள் பொதுவாக எப்படி இருப்பார்கள் அவர்கள் என்ன யோசிப்பார்கள் என்று பெண்கள் கணிப்பதுண்டு. ஆனால் உளவியல் ரீதியாக ஆண்களைப் பற்றிய படிப்பில் வெளிவந்த சில ஆச்சரியமான தகவல்களைக் இங்கே காணலாம் வாருங்கள்.

    • ஆண்கள் அணியும் டீ சட்டையை விட அவர்கள் அணியும் சாதாரணமான சட்டைகள் மீது தான் அதிக ஈர்ப்புகள் இருக்குமாம். 
    • ஆண்கள் முழுமையாக முகம் சரித்தாள் அழகாக இருப்பார்கள். தாடியுடன் இருக்கும் பொது சிறிது விரைப்பாகவும் கூவாமண மனிதர் போல் தோன்றினாலும் அந்த தாடியும் மீசையின் மீது தான் அதிக ஈர்ப்புகள் இருக்குமாம். 
    • ஆண்கள் பொதுவாக உதவிகள் கேட்பது குறைவாம். அவர்கள் அதை தன்னால் முடியாது என்று நினைக்க மாட்டார்களாம். முயற்சிகள் அதிகம் செய்தவுடன் கடைசியில் தேவைப்பட்டால் மட்டுமே உதவியை நாடுவார்களாம். 
    • ஆண்களுக்கு பிறருடன் ஒப்பிடுவது சிறிதும் பிடிக்காத விடயமாம். பெண்களுக்கு ஆண்கள் வேறொரு பெண்ணிடம் பேசினால் பொறாமை கொள்வார்கள். அதைக்காட்டிலும் தான் விரும்பும் பெண் வேறொரு ஆணிடம் பேசினால் கோபமும் பொறாமையும் அதிகம் வெளிப்படுத்துவார்களாம்.
    • ஆண்கள் அதிகமானோர் தனது குடும்பத்தைப் பற்றி அதிகம் யோசனையையும் செயல்களையும் உடையவர்களாம். 
    • பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு பொறாமை உணர்வு அதிகம் இருக்குமாம். அதுவும் காதலில் மிகவும் அதிகமாம். 
    • ஆண்கள் பொதுவாக அவர்கள் அப்பா போன்றே ஆக ஆசைப்படுவார்களாம். 
    • ஆண்கள் பொதுவாக அவர்கள் உடன் பிறந்தவர்களுடன் சண்டைகள் இட்டாலும் வெளியில் விட்டுக்க கொடுக்கமாட்டார்களாம்.
    • பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோன் அதிக அளவில் சுரக்குமாம். இதனால் தான் அதிக ஈர்ப்புகளை வெளிப்படுத்துவார்களாம். 
    • ஆண்கள் அவர்களின் அம்மாவின் மீது அதிக அன்புடன் இருப்பார்களாம். அப்பாவின் மீது அன்பு இருக்குமாம். ஆனால் அதை அவர்கள் வெளிப்படுத்த தயங்குவார்களாம்.
    • பெண்கள் ஆண்களைப் புகழ்ந்தால் அது அவர்களுக்கு மிகவும் பிடிக்குமாம். அவர்கள் நண்பர்கள் புகழ்வதைக் காட்டிலும் பெண்கள் புகழ்ந்ததைத் தான் அதிகம் நினைவில் வைத்துக் கொள்வார்களாம். 
    • பெண்களைவிட ஆண்களுக்கு குறைந்த அளவில் தான் வயதான தோற்றம் ஏற்படுமாம். (இது ஒன்று தான் என்னால் ஏற்க முடியாது ஒன்று நான் பெண்ணாக இருப்பதால்! நீங்கள் ஆணாக இருந்தால் இப்போது சிரித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எனக்கும் சிறிது உளவியல் தெரியும்.)

    முரட்டுத் தனமான மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் இரக்ககுணம் பற்றிய கதை !

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....