Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வெறும்நாளையும் திருநாளாக மாற்றக்கூடியவர்கள்தானே அஜித்குமார் இரசிகர்கள்?!

    வெறும்நாளையும் திருநாளாக மாற்றக்கூடியவர்கள்தானே அஜித்குமார் இரசிகர்கள்?!

    அஜித் குமார் நடித்து இறுதியாய் வெளிவந்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை. அதுவும் 2019 இல். அது மட்டுமில்லாமல் அது முழுக்க முழுக்க அஜித் திரைப்படமாக இல்லை. முழுக்க முழுக்க அஜித்குமார் திரைப்படத்தை இரசிகர்கள் எதிர்பார்க்க அதற்கு பதிலாய் வலிமை திரைப்படம் அமையும் என்ற நம்பிக்கையை வலிமை திரைப்படத்தின் இயக்குனர் எச்.வினோத் விதைத்தார். 

    சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை முதலிய வெற்றி திரைப்படங்களை இயக்கியவர்தான் எச்.வினோத். வலிமை திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என அனைவரும் எதிர்பார்க்க கொரோனா அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கியது. கொரோனா காரணமாய் படப்பிடிப்பு நிற்க, படப்பிடிப்பு நிறைவடைந்தப்பின் அதே கொரோனாவால் திரைப்படம் வெளியாவது தள்ளிப்போக, தொடர்ந்து இரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர். 

    valimai ajith

    அந்த ஏமாற்றம் சில மாதம் முன்பு வரை ‘வீ வான்ட் வலிமை அப்டேட்’ என்று அஜித் ரசிகர்களை பல இடங்களில் கேட்க வைத்தது. கிரிக்கெட் மைதானம், அரசியல்வாதிகள் வாக்கு சேகரித்த இடமென பல பொது இடங்களில் அஜித் ரசிகர்கள் வலிமை படத்திற்க்கான அப்டேட் கேட்டு கையில் பலகைகளை, போஸ்டர்களை ஏந்தினர். கொரோனா பரவலை புரிந்துக்கொண்டு அஜித் ரசிகர்கள், நிலைமை முன்னேற்றம் அடைந்ததும் திரைப்படம் வெளியாகட்டும் என கூறிவந்ததெல்லாம் வியப்பாக இருக்கிறது. 

    valimai

    ஆனால் தற்போது, அஜித்குமார் ரசிகர்களின் ஏக்கம், இதுவரை நேர்ந்த ஏமாற்றம் என அனைத்தும் நீங்கியுள்ளது. ஆம்! கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து வலிமை திரைப்படம் இம்மாதம் 24 ஆம் தேதி வெளியாகும் என திரைப்படத்தின் தயாரிப்பாளர் , போனி கபூர் அறிவித்துள்ளார். இதனால் அஜித் இரசிகர்கள் மிகுந்த ஆனந்தத்தில் தற்போது உள்ளனர்.  

    ஏற்கனவே வலிமை திரைப்படத்தில் இருந்து வெளியான பாடல், ட்ரைலர் என அனைத்தும் அஜித் ரசிகர்களிடம் மட்டும் அல்லாது பொதுமக்களையும் கவர்ந்தது. குறிப்பாக வலிமை மேக்கிங் வீடியோவில் பரபரப்பான ஆக்ஷன் காட்சிகளை படம்பிடித்த விதத்தையும் அதனூடே கொரோனாவினால் ஏற்பட்ட தடங்களையும் அதன் பின்பு அஜித் ரசிகர்கள் வலிமைக்காக கொடுத்த அரவணைப்பையும் காட்சிப்படுத்தியது பலரையும் உணர்ச்சிவசத்தில் ஆழ்த்தியது என அனைத்தும் வலிமைச்சார்ந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.  

    valimai 24

    மேலும், சமீபத்தில் எச்.வினோத் அவர்கள் வலிமை திரைப்படத்தின் முதல்பாதி புலனாய்வு சார்ந்தவையாகவும், இரண்டாம் பாதி சண்டைக்காட்சிகள் நிறைந்ததாகவும் இருக்கும் என கூறியவையும் குறிப்பிடத்தக்கது. 

    வலிமை திரைப்படம் திரைக்கு வரும் நாள் வெறும் நாளானாலும் அஜித்குமார் இரசிகர்கள் அந்த வெறும்நாளையும் திருநாளாக மாற்றிவிடுவர் என்பதில் மாற்றுகருத்து இல்லை! 

    வலிமை முன்னோட்டத்தை காண க்ளிக் செய்யவும்; https://youtu.be/Gi83R8jEqZU

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....