Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வலிமைக்கு வந்த எதிர்மறை விமர்சனங்கள்; படக்குழு எடுத்த திடீர் முடிவு!

    வலிமைக்கு வந்த எதிர்மறை விமர்சனங்கள்; படக்குழு எடுத்த திடீர் முடிவு!

    மீப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 24 ஆம் தேதி வெளியான திரைப்படம்தான், வலிமை. அஜித்குமார் அவர்கள் நடிக்க, எச். வினோத் அவர்கள் வலிமை திரைப்படத்தை இயக்கியுள்ளார். பல நாட்களுக்கு பிறகு திரையரங்குகளில் அஜித்குமார் அவர்களின் திரைப்படம் வெளியாக, தமிழகம் முழுவதும் பல திரையரங்குகள் கொண்டாட்டமாய் ஆகின.

    வலிமை திரைப்படம் குறித்து நேர்மறையாக பல விமர்சனங்கள் எழுந்தன. அதே சமயம் எதிர்மறையாகவும் விமர்சனங்கள் எழுந்தன. வலிமை திரைப்படத்தில் எதிர்மறையான விமர்சனங்கள் என்று கூறப்பட்டவைகளில் முக்கியமானவை படத்தின் நீளமும், சென்டிமென்ட் காட்சிகளும்தான். இரண்டு நாட்களாக வந்த விமர்சனங்களில் வலிமை திரைப்படத்தின் குறைகளாக பலரும் இதையே சொல்ல, படக்குழு முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

    valimai

    அதன்படி, வலிமை திரைப்படத்தின் நீளத்தை குறைத்து, வலிமை திரைப்படம் இன்று முதல் திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வலிமை திரைப்படத்தின் நீளம் 2 மணி நேரம் 58 நிமிடங்களில் இருந்து, 2 மணி நேரம் 44 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நீள குறைப்பில் சென்டிமென்ட் காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எது எப்படியாக இருந்தாலும், வலிமை திரைப்படத்தின் வசூலுக்கு துளியும் பாதிப்பில்லை. ஏற்கனவே இதுவரை வெளியான தமிழ் திரைப்படங்களில் தமிழகத்தில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை வலிமை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....