Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்விமர்சனங்களைக் கடந்து வலிமை திரைப்படம் செய்த மாபெரும் சாதனை! - ரசிகர்கள் குதூகலம்!

    விமர்சனங்களைக் கடந்து வலிமை திரைப்படம் செய்த மாபெரும் சாதனை! – ரசிகர்கள் குதூகலம்!

    ஒரு நிகழ்வு குறித்து எதிர்மறை கருத்துகள் தொடர்ந்து வந்தாலும் நடந்த அந்நிகழ்வில் நேர்மறை எண்ணங்களின் வீரியம் அதிகம் இருப்பின் அவை மெதுவாகவேனும் நேர்மறையான பதில் நிகழ்வுகளை பெறும் என்பர். அப்படியான நிகழ்வுகள்தான் வலிமை திரைப்படத்திற்கு நிகழ்ந்து வருகிறது.

    அஜித்குமார் நடிப்பில் ஏறத்தாழ இரண்டரை வருடங்கள் கழித்து பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம்தான், வலிமை. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கிய எச். வினோத் அவர்கள் வலிமை திரைப்படத்தை இயக்கினார். மறைந்த பிரபல நடிகை ஶ்ரீதேவி அவர்களின் கணவர் போனி கபூர் தயாரிப்பில், யுவனின் பாடல்களில், ஜிப்ரான் அவர்களின் பின்னனி இசையில் வலிமை திரைப்படம் உருவானது.

    பல மாதங்களுக்கு பிறகு அஜித்குமார் திரைப்படம் ஒன்று திரைக்கு வருகிறது என்பதால் அஜித்குமார் ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் திரைத்துறையின் பல ரசிகர்களும் வலிமை திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகம் வைத்திருந்தனர்.

    பல இன்னல்களுக்கு பிறகு ஒரு வழியாக கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வலிமை திரைப்படம் திரையரங்குகளில் கோலாகலமாய் வெளியானது. ஆம்! தமிழகம் முழவதும் பெரும்பாலான திரையரங்குகளில் வலிமை வெளியாக அவற்றில் பல திரையரங்குகளும் திருவிழாக்கோலம் பூண்டன. 

    வலிமை திரைப்படம் குறித்து நேர்மறை கருத்துகளும் எதிர்மறை கருத்துகளும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்க, படத்தின் நீளம் மற்றும் எமொஷனல் காட்சிகளால் எதிர்மறை கருத்து நேர்மறை கருத்துகளை தாண்டி வெளியில் வந்தது. படக்குழுவும் இதைப் புரிந்துக்கொண்டு படத்தின் நீளத்தை குறைத்தனர். படத்தின் நீளம் குறைக்கப்பட்ட பின்பு வலிமை திரைப்படத்தைக் குறித்த நேர்மறை கருத்துகள் அதிகம் பரவின. மற்றொருப் பக்கம் எதிர்மறை கருத்துகளும் பரவின.

    எது எப்படியாக இருப்பினும் திரையரங்குகளில் நன்றாகவே ஓடுவேன் என்றபடி வலிமை திரைப்படம் வெற்றிநடைப் போட்டுக்கொண்டிருக்க வசூலில் சாதனைகளை நிகழ்த்தி வந்தது. திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் நூறு கோடி வசூல் செய்தது, வலிமை. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என வலிமை திரைப்படம் வெளியாக மற்ற மொழிகளிலும் வலிமை திரைப்படம் வரவேற்பை பெற்றது. 

    இந்நிலையில், வலிமை திரைப்படம் வெளியாகி 25 நாட்களை கடந்தும் திரையரங்குகளில் நடைப்போட்டுக் கொண்டிருக்க, தற்போது 200 கோடி வரை வலிமை திரைப்படம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த தகவலானது அஜித்குமார் ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் சமூக வலைத்தளங்களிலும் வலிமை தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது . மேலும் நாளை வலிமை திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....