Tuesday, March 21, 2023
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா"மக்கள் தடுப்பூசி போட்டு கொள்வது கட்டாயமில்லை": உச்ச நீதிமன்றம் அதிரடி!

    “மக்கள் தடுப்பூசி போட்டு கொள்வது கட்டாயமில்லை”: உச்ச நீதிமன்றம் அதிரடி!

    சென்னையில் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என பல்வேறு மாநில அரசுகள் விதித்த கோட்பாட்டிற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

    அனைத்து மத்திய மாநிலங்களிலும் பெருகி வரும் கொரோனா வைரஸ் நோயினால் மக்கள் பலவகை தடுப்பூசிகள் போடப்படும் நிலைக்கு தற்போது தள்ளப்பட்டு உள்ளனர்.

    இது மக்களின் நலன் கருதி அனைத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த முடிவாகும். இதனை, மக்களும் வரவேற்கவே செய்தனர்.

    ஆனால், இந்த தடுப்பூசி போடப்படுவதில் மக்கள் பலர் கட்டாயப்படுத்தவும் படுகின்றனர்.

    இதன் தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:

    • தடுப்பூசி செலுத்தி கொள்வது தனி நபரின் உரிமை, தடுப்பூசி செலுத்தி கொள்ள யாரையும் கட்டாயபடுத்த கூடாது என உச்ச நீதிமன்றம் அதிரடியாக அறிவித்து உள்ளது.
    • இந்திய அரசியல் சாசன பிரிவு 21-ன் கீழ் தடுப்பூசியை செலுத்தி கொள்ள யாரையும் கட்டாயப்படுத்த முடியாது எனவும் அறிவுறுத்தி உள்ளது.
    • மத்திய அரசு உருவாக்கிய “தடுப்பூசி கொள்கையானது” நாட்டிற்கு உதவாது என்றும் சொல்ல முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
    • மேலும், மாநில அரசுகள் மக்களின் நலனை கருத்தில் கொண்டு சில கொள்கைகளை வகுத்து கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

    கோடை காலத்தில் குழந்தைகளை எப்படி கவனித்துக்கொள்ள வேண்டும் என்று குழப்பமா? – இதை படியுங்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    bjp leader

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி- பாஜக அண்ணாமலை

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  இந்த ஆண்டுடின் முதல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர்...