Tuesday, May 16, 2023
மேலும்
  Homeதொழில்நுட்பம்இனி ஸ்மார்ட்போன் கேமரா போதும்; உங்க உடம்பில் உள்ள நோயை நீங்களே தெரிஞ்சுக்கலாம்!

  இனி ஸ்மார்ட்போன் கேமரா போதும்; உங்க உடம்பில் உள்ள நோயை நீங்களே தெரிஞ்சுக்கலாம்!

  நானோ(nano) தொழில்நுட்ப காலம் ஆரம்பித்து சில வருட காலங்களாகி ஆகிவிட்டது. பல ஆராய்ச்சியாளர்கள் இதற்காக பாடுபட்டு கொண்டு இருக்கின்றனர். உலகத்தை நம் கைக்குள்ளே அடக்கிவிடும் முயற்சியில் நானோ தொழில்நுட்பம் தற்போது இறங்கி உள்ளது.

  அதன் அடிப்படையில் இவர்கள் கூறும் மருத்துவம் சார்ந்த தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மனித இனத்தை இன்னும் அதிக காலம் வாழவைக்க மேற்கொள்ளப்படும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

  இதன் அபரித வளர்ச்சியின் மூலம், தற்போது மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் மெட்டா ஆப்டிகல் சாதனங்கள் துறையில் ஆய்வு செய்து வரும் டாக்டர் லூகாஸ் வெஸ்மேன் என்பவர், மலேரியா போன்ற தொற்று நோய்கள் மற்றும் தொற்று அல்லாத நோய்களை நானோ தொழில்நுட்பம் உதவியுடன், ஸ்மார்ட்போன் கேமராவை கொண்டு கண்டறியும் முறையை பரிசோதித்து பார்த்துள்ளார். இது வெற்றிகரமாகவும் அமைந்து உள்ளது.

  இதனை பற்றி மேலும் டாக்டர் லூகாஸ் வெஸ்மேன் கூறி இருப்பது என்னவென்றால்: மலேரியாவுக்கான சிகிச்சைகள் பல நடைமுறையில் இருந்தாலும் தொலைதூர மக்களிடம் நோயறியும் கருவிகள் இல்லாததே, ஆரம்ப நிலையில் கண்டறியாமல் போக காரணமாக உள்ளது. மேலும், மலேரியா போன்ற தொற்று நோய்கள் பல இடங்களில் மக்களின் மரணத்திற்கு காரணமாக உள்ளன. இதனால், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கான சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வது என்பது விஞ்ஞானிகளுக்கு ஒரு பெரும் சவாலாக உள்ளது.

  இதனால் நாங்கள் ஒரு புதிய முறையை உருவாக்கி உள்ளோம். இது உயிரியல் செல்களை ஆய்வு செய்வதற்கான புதிய முறை ஆகும். அது ஸ்மார்ட்போன் கேமரா லென்சில் பொருத்தும் அளவிற்கு சிறியது. இதுவரை ஆய்வகத்தில் மட்டுமே சோதனை செய்துள்ளோம். எதிர்காலத்தில் இந்த நானோ தொழில்நுட்பம் ஒரு ஸ்மார்ட்போனை பயன்படுத்தி யதார்த்த உலகில் நோயைக் கண்டறிய உதவும் என்று நம்புகிறோம். அதன் மூலம் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும் என்று அவர் கூறினார்.

  இந்த ஆய்வில் கேமரா லென்ஸின் பங்கு என்ன?

  நுண்ணோக்கிகள் மூலம் உயிரியல் செல்களை ஆய்வு செய்வதே நோயறிதலின் அடிப்படை. அந்த செல்களில் காணப்படும் குறிப்பிட்ட மாற்றங்கள் நோயினை குறிக்கும். உதாரணத்திற்கு நோயாளியின் ரத்த சிவப்பணுக்களில் குறிப்பிட்ட மாற்றங்களைக் நுண்ணோக்கிப் படங்கள் காட்டினால் அதனை வைத்து மலேரியாவை உறுதிப்படுத்துவர்.

  பேஸ் இமேஜிங் செயல்முறையைப் பயன்படுத்தி இதுப்போன்ற செல்களை ஆராய்வர். ஆனால் இதற்கான உபகரணங்கள் பெரிது மற்றும் செலவுமிக்கது. தொலைதூர பகுதிகளில் பயன்படுத்த வாய்ப்பு இல்லை. இங்கு தான் நமக்கு நானோ தொழில்நுட்பம் கைக் கொடுக்கிறது.

  இந்த நானோ தொழில்நுட்பம் மிக எளிதானது. மிக மெல்லிய தகட்டில் நானோ அமைப்பை உருவாக்கி உள்ளோம். “ஆப்டிகல் ஸ்பின்-ஆர்பிட் கப்ளிங்” என்ற விளைவைப் பயன்படுத்தி வழக்கமான நுண்ணோக்கிகள் செய்யும் இமேஜிங் செயல்முறை செய்யப்படுகிறது. சாதனத்தின் மேல் செல்கள் வைக்கப்படும். செல் வழியாக ஒளி வீசும். முன்பு கண்ணுக்கு தெரியாமல் இருந்த செல் அமைப்பு மறுபுறம் தெரியும். எதிர்காலத்தில் இத்தொழில்நுட்பத்தை கேமரா லென்ஸில் ஒருங்கிணைப்பது தான் நோக்கம். இவ்வாறு டாக்டர் லூகாஸ் வெஸ்மேன் கூறியுள்ளார்.

  நானோ தொழில்நுட்பத்தின் பல்வேறு பயன்பாடுகள்:

  உடலியல் மற்றும் மருத்துவத்துறை நானோ கருவிகள் உடலின் சிறிய உறுப்புகள், செல்களோடும் தொடர்பு கொள்ளும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. தொழில்நுட்பத்தின் மூலம், எந்த உறுப்பின் மீது செயல்படுத்த வேண்டுமோ அதைத் துல்லியமாகத் தேர்வு செய்து, தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க முடியும். அதிகபட்ச பயன்பாடு, மிகக்குறைந்த பக்கவிளைவு என்பதே இதன் நோக்கம்.

  மாலிக்யூலர் நானோ தொழில்நுட்பம்:

  நானோ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியோடு ஒப்பிடுகையில் மாலிக்யூலர் நானோ தொழில்நுட்பம் இன்னும் ஆய்வுக்கட்டத்தில்தான் உள்ளது. இத்தொழில்நுட்பம் துல்லியமான, மூலக்கூறு அளவிலான கட்டுமானத் தொகுப்புகளின் அடிப்படையில் உற்பத்தி செய்வது தொடர்பானதாகும். கட்டுமானத் தொகுப்புகளில் இயற்கை மூலக்கூறுகளைப் பயன்படுத்துதல், ஆர்கானிக் பைபர், ஆர்கானிக் கிரிஸ்டல்கள் தொடர்பாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

  மாலிக்யூலர் நானோ தொழில்நுட்பத்தின் முக்கிய பயன்பாடு, மருத்துவத்துறையில் நானோ ரோபோக்கள், நானோ மருந்துகள் ஆகும். நானோ ரோபோ தொழில்நுட்பத்தின் மூலம் மரபணு பிரச்னையை சரி செய்தல், மனிதனின் இயற்கை ஆற்றலை அதிகரித்தல், உடல் உபாதைகளில் இருந்து வலியற்ற நிவாரணம், நோய்களில் இருந்து விரைவாக குணமடைதல் போன்றவை சாத்தியமாகும்.

  இருந்தபோதும், அக்கருவிகள் தாங்களாகவே மனித உடலில் சுயமாக மாற்றங்களை நிகழ்த்த அனுமதிக்கப்படமாட்டாது. அவை வரைமுறைக்கு உட்படுத்தப்பட்டே செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

  இத்தொழில்நுட்பத்தின் மூலம் அதீத திறன்மிக்க கம்ப்யூட்டர்களை உருவாக்க முடியும்.

  கருவிகளையும் உபகரணங்களையும் தற்போதைய எடையை விட 50 மடங்கு லேசாக, அதேசமயம் தற்போதுள்ள வலிமையோடு தயாரிக்க முடியும். ஜெட் விமானங்கள், ஏவுகணைகள், கார்கள் ஏன் நாற்காலிகள் உட்பட அனைத்தையும், மிகவும் உறுதியானதாக, எடைகுறைவாக, மிகக்குறைந்த செலவில் தயாரிக்க முடியும்.

  மாலிக்யூலர் அறுவைசிகிச்சை உபகரணங்கள், கம்ப்யூட்டர்களின் வழிகாட்டுதலுடன் ரத்த ஓட்டத்தில் கலந்து, கேன்சரை உருவாக்கும் செல்களை அழித்தல், மோசமான பாக்டீரியாக்களை எதிர்த்தல், ரத்தக்குழாய் அடைப்பைச் சரி செய்தல், தேவையான பிராண வாயுவை பலவீனமான இடங்களுக்கு பரவச் செய்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் செய்ய முடியும்.

  அனைவருக்கும் சிறந்த உடல்நலத்தை வழங்க இது உறுதுணையாக இருக்கும். சின்னம்மை மிக அரிதாகக் காணப்படுவது போன்று, உடல்நலக்குறைவும் மிக அரிதாகவே இனி இருக்கும். இந்த தொழில்நுட்பத்தின் இறந்த செல்களை மாற்றி அமைப்பது கூட சாத்தியமாகும்.

  இலங்கை எதிர்க்கட்சிகளின் சக்கர வியூகம்! கவிழப் போகிறதா ராஜபக்சே அரசு?

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....