Monday, March 18, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்உக்ரைனில் சைபர் அட்டாக் : மீண்டும் இணையசேவையை தொடங்குகிறது யுகேஆர்டெலிகாம் நிறுவனம்

    உக்ரைனில் சைபர் அட்டாக் : மீண்டும் இணையசேவையை தொடங்குகிறது யுகேஆர்டெலிகாம் நிறுவனம்

    நேட்டோ அமைப்பில் சேர்வதை எதிர்த்து ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது போர்தொடுத்து வருகிறது. சுமார் ஒரு மாதத்திற்கு மேலாகியும் உக்ரைன் பின்வாங்கததால் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் போர்தொடங்கிய போதில் இருந்தே ரஷ்யாவின் யுகேஆர் டெலிகாம் என்ற இணையதளத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனை உலகளாவிய இணைய நிறுவனமான நெட்ப்ளாக்ஸ் இணையதள இடையூறு என்று கூறியது.

    இது குறித்து விளக்கம் அளித்துள்ள அந்நிறுவனம் சில முக்கிய கட்டமைப்புகளை பாதுகாப்பதற்காகவும் மற்றும் சில ராணுவ பயன்களுக்காவும் தான் முடக்கப்பட்டது எனக் கூறியுள்ளது. இதனால் சராசரி இணைய அளவில் 13 சதவீதம் குறைவு ஏற்பட்டது. 

    ஆனால், இதனால் வெவ்வேறு இணைய வழங்குநர்களிடம் பயன்பெறும் பயனாளர்கள் இணையத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்து இருந்தார். யுகேஆர்டெலிகாம் நிறுவனத்தைப் பொறுத்தவரையில், புவியியல் கவரேஜின் அடிப்படையில் நிலையான இணையத்தை வழங்கும் நாட்டின் மிகப்பெரிய நிறுவனம் ஆகும். ஆனால், வாடிக்கையாளர்களின் அடிப்படையில் கீவ்ஸ்டார் என்ற நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. 

    ரஷ்யாவின் படையெடுப்புக்குப்பின்னால் தங்களுடைய முழு கவரேஜில் 80 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது. இது குறித்து பேசிய அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி யூரி குர்மாஸ் தங்களுடைய யுகேஆர்ட்டெலிகாம் நிறுவனத்தின் ஐடி பகுதியில் கடுமையான எதிரி சைபர் தாக்குதல் நடந்துள்ளதாக தெரிவித்து இருந்தார். 

    ஆனால், தங்களுடைய உட்கட்டமைப்பில் சிலவற்றைப் பாதுகாக்கவும், ராணுவத்தின் உட்கட்டமைப் பயன்படுத்துவபவர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும் சில பயனாளர்களுக்கு சேவையை ரத்து செய்தோம் என்றும் கூறினார். 

    மேலும், சைபர் தாக்குதல் மெது மெதுவாக முறியடிக்கப் பட்டுள்ளதாகவும், மீண்டும் விரைவில் சேவை பழைய நிலைக்குத் திரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். 

    உக்ரைனின் சிறப்பு தொடர்பு மற்றும் தகவல் பாதுகாப்பு சேவைக்கான மாநிலத்து தலைவர் யூரி ஷிகோல் அதன் வல்லுநர்கள் உடனடியாக பதிலளித்ததாகவும் மற்றும் தாக்குதலை உடனடியாக திரும்பப் பெற்றதாகவும் கூறினார். 

    இது சம்பந்தமான விவரங்களை வெளியிட்டு வரும் நெட்பிளாக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஆல்ப் டோக்கர், பயனர்களுக்கு சேவை ஆஃப் லைனில் குறைந்து வந்ததாகவும்,  இது சைபர் தாக்குதலாக இருக்கலாம் என்று முன்கூட்டியே கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....