Tuesday, March 21, 2023
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ரஷ்யா தாக்குதலைத் தீவிரப்படுத்த, அனைவரையும் தண்டிப்போம் என சூளுரைக்கும் உக்ரைன் அதிபர்!

    ரஷ்யா தாக்குதலைத் தீவிரப்படுத்த, அனைவரையும் தண்டிப்போம் என சூளுரைக்கும் உக்ரைன் அதிபர்!

    நீளும் போர் 

    ரஷ்யா – உக்ரைனுக்கு இடையேயான போர் நீண்டுக்கொண்டே சென்றுக்கொண்டிருக்கிறது. போர் முடிவுக்கு வரும் என்று உலக நாடுகள் எதிர்ப்பார்க்க ஆனால் அப்படியான எதிர்ப்பார்ப்பு தொடரந்து பொய்த்துக்கொண்டே இருக்கிறது. தரைவழி, வான்வழி என தாக்குதல்கள் நடந்த வண்ணம் இருக்க தற்போது கடல்மார்க்கமாகவும் தாக்குதல்கள் நடைபெற ஆரம்பித்துவிட்டன.

    russia

    வளமாய் இருந்த உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் தற்போது வளமென்றால் என்ன என்பதைப்போல் காட்சியளிக்கிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் உக்ரைன் தலைநகரான கீவ், கார்கிவ் போன்ற பகுதிகளை சொல்லலாம். ரஷ்ய இராணுவத்தால்  350 க்கும் அதிகமான உக்ரைன் நாட்டு பொதுமக்கள் இப்போரின் போது கொல்லப்பட்டனர். மேலும், இலட்சக்கணக்கில் பொதுமக்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர். தஞ்சம் புகுந்தும் வருகின்றனர்.

    இரு அதிபரின் சூளுரைகள்

    Vladimir Putin

    இந்நிலையில், துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் அவர்களுடன் ரஷ்ய அதிபர் புதின் தொலைப்பேசி வழியாக உரையாடல் மேற்கொண்டதாக தெரிகிறது. அப்போது, உக்ரைன் ரஷ்யாவிடம் சரணடையாவிட்டால் அந்நாட்டின் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தப் போவதாகவும், அதே சமயம் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை வழியாகத் தீர்வு காண ரஷ்யா தயாராகவே உள்ளது எனவும் நிகழ்ந்த உரையாடலில் புதின் பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ukraine_president

    மற்றொருபுரத்தில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அவர்கள், நாங்கள் மன்னிக்க மாட்டோம், மறக்க மாட்டோம். எங்கள் நிலத்தில் அட்டூழியங்களைச் செய்த அனைவரையும் தண்டிப்போம். இந்த பூமியில் கல்லறையைத் தவிர அமைதியான இடம் இருக்காது” என சூளுரைத்துள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    bjp leader

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி- பாஜக அண்ணாமலை

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  இந்த ஆண்டுடின் முதல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர்...