Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇனிமேல் இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கும் தேர்வு : யுஜிசியின் புதிய அறிக்கை !

    இனிமேல் இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கும் தேர்வு : யுஜிசியின் புதிய அறிக்கை !

    மத்திய அரசின் பல்கலைக்கழகங்களின் கீழ் உள்ள இளங்கலை படிப்புகளுக்கு இனிமேல் நுழைவுத் தேர்வு எழுதினால் மட்டுமே பயிற்சி பெற முடியும் என யுஜிசி அறிவித்துள்ளது. 

    ஒவ்வொரு ஆண்டும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இளங்கலை பட்டபடிப்புகளுக்கான மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெறும். இதற்கு முன்னதாகவே 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவது வழக்கம். 

    ஆனால், தற்பொழுது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளுக்கு இனிமேல் 12ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் மட்டும் போதாது எனவும், நுழைவுத்தேர்வு வைத்து அதன் அடிப்படையிலேயே சேர்கை நடைபெறும் என்று பல்கலைக்கழக மானியக்குழு ( யுஜிசி ) அறிவித்துள்ளது. 

    இது குறித்து பேசிய பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் ஜெகதீஷ் குமார், வரும் 2022-2023 ஆம் கல்வியாண்டில் இருந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கழைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கு பொது நுழைவுத் தேர்வானது தேசிய தேர்வு முகமையினால் நடப்பட்டும் என்று தெரிவித்துள்ளார். இனிமேல் 12 ஆம் வகுப்பில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறாது என அறிவித்த அவர் என்சிஇஆர்டி  பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்விகள் தேர்வில் இடம்பெறும் என அறிவித்துள்ளார். 2022-2023 ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் ஜூலை மாதத்தில் நடைபெறும் எனவும், அனைத்து மாநிலங்களிலும் தேர்வுகள் முடிந்துவிடும் நிலையில் ஜூலையில் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழ்,தெலுங்கு, ஆங்கிலம், இந்தி ஆகிய 13 மொழிகளில் தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். 

    இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் முறை மூலம் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்தே விண்ணப்பிக்கத் தொடங்கலாம் என கூறியுள்ளார். தேர்வுகள் கணினியில் நடைபெறும் எனவும், இதற்கு மாணவ மாணவிகளுக்கு கணினி புலமை இருக்க வேண்டிய அவசியமில்லை எனவும் கூறியுள்ளார். இந்தத் தேர்வு இடஒதுக்கீட்டில் சிறிதளவும் மாற்றத்தை ஏற்படுத்தாது எனவும் தெரிவித்துள்ளார். இதற்கான முடிவுகளை டிஎன்ஏ வெளியிடும் என தெரிவித்த அவர், விருப்பப்பட்டால் மாநில மற்றும் தனியார் கல்லூரிகளும் இந்தத் தேர்வின் அடிப்படையில் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஒரே நாடு ஒரே பொது நுழைவுத் தேர்வு என்ற திட்டம் நிறைவேற்றப்பட்டு மாணவர்கள் பல நுழைவுத்தேர்வுகளை எழுதும் சிக்கலில் இருந்தும் விடுதலை பெறுவர் என தெரிவித்துள்ளார். இந்தியாவில் பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதியுதவியுடன் 45 பழ்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....