Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்உகாதி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

    உகாதி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

    பிரம்மன் கதை:

    உகாதி தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளை தாய் மொழியாக கொண்டவர்கள் கொண்டாடும் பண்டிகை ஆகும். சைத்ர மாதத்தின் முதல் நாளில் பிரம்மன் இவ்வையகத்தை படைத்தார் என்பதால் அந்த நாளில் புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். 

    யுகாதி சொற்பொருள்: 

    ‘யுகா’ என்ற சொல் சமஸ்கிருத மொழியிலிருந்து வந்தது என்று கூறப்படுகிறது. ‘யுக’ என்ற சொல்லுக்கு வயது என்று பொருள். அடி என்ற சொல்லுக்கு தொடக்கம் என்பது பொருள். ஆதலால் உகாதி என்ற சொல்லுக்கு பொருள் ஆண்டின் தொடக்கம் என்பது ஆகும். தெலுங்கு பேசும் மக்கள் இதனை உகாதி என்றும் கன்னடம் பேசும் மக்கள் இதனை யுகாதி என்றும் சொல்வர். இந்நாள் சித்திரை (சைத்ர) மாதத்தில் கொண்டாடப்படும். ஆங்கில நாட்காட்டியின்படி இது மார்ச் மாதம் அல்லது ஏப்ரல் மாதம் கொண்டாடப்படும். 

    தமிழ்நாட்டில் உகாதி: 

    தமிழ்நாட்டில் தெலுங்கு மற்றும் கன்னடத்தை தாய் மொழியாக கொண்டவர்கள் வசிக்கிறார்கள். அவர்களால் இப்பண்டிகை தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதிகாலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிவர். மாவிலை தோரணங்களால் வீட்டை அலங்கரிப்பர். மேலும் வாசனை மிகுந்த மலர்களால் இறைவனை அலங்கரித்து வழிபாடு செய்வர். பின்பு பெரியோர்களிடம் ஆசிப் பெற்று மகிழ்வர்.  

    சிறப்பு உணவுகள்: 

    உகாதி தினத்தில் மிகவும் சிறப்பு பெற்றது அறுசுவை பச்சடி ஆகும். இதில் வேப்பம் பூ, மாங்காய், வெல்லம், மிளகாய், உப்பு, புளி என அறுசுவை கொண்ட பொருட்களை ஒரு பானையில் சேர்த்து பாட்டுப் பாடிக் கொண்டே சமைத்து பரிமாறுவர். இது செய்ய முக்கிய காரணம் இனிப்பும் கசப்பும் அதாவது இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை என்பதை உணர்த்துவதற்காக இப்படி அறுசுவை கொண்ட உணவு செய்யப்படுகிறது. 

    இதில் இன்னொரு சிறப்பு பானகமாக இனிப்பு, புளிப்பு, காரம் கலந்த நீர் தயாரிக்கப்படுகிறது. இதில் வெல்லம், ஏலக்காய், சுக்கு, மிளகு, புளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் கலந்த பானகம் தயாரிக்கப்படுகிறது. இது வீட்டிற்கு வரும் உற்றார் உறவினர்களுக்கு பானகமாக கொடுப்பது வழக்கம் ஆகும். மேலும் கோடைக்காலம் என்பதால் இது உடம்பை குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க உதவும். 

    மராத்திய புத்தாண்டு:

    இதே நாளில் மராத்திய மக்கள் புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். இவர்கள் இப்பண்டிகையை ‘குடி பத்வா’ என்று கொண்டாடுகின்றனர். மேலும் இந்நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிவர். வண்ண வண்ண கோலங்களை வாசலில் இடுவது வழக்கம். இதன் சிறப்பம்சமாக ‘குடி’ என்று அழைக்கப்படும் முளைக் கம்பின் மேல் பித்தளை அல்லது வெள்ளி சொம்பினை கவிழ்த்து, அதன் மேல் பட்டாடை உடுத்தி பூக்கள் சுற்றி வாசலில் நாட்டி வழிபடுவது வழக்கம். 

    மேலும் இவர்கள் சிறப்பு உணவாக பூரண் போளி செய்து சாப்பிடுவது வழக்கம். இதனை தெலுங்கு மாற்றம் கன்னடம் மக்களும் செய்வது உண்டு. மேலும் இந்தப் போளியில் நெய் பால் ஊற்றி சாப்பிடுவர். 

    தமிழ்நாட்டில் வாழும் மராத்தி, தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் உணவு விருந்து முடிந்த பிறகு கோவில் சென்று இறைவன் வழிபாடு செய்வர். 

    இதே நாளில்… 
    • சிந்தி இன மக்கள் இதனை ‘சேட்டி சந்த்’ என்று கொண்டாடுகின்றனர்.
    • மணிப்பூர் வாழ் மக்கள் ‘சாஜிபு நொங்மா பன்பா’ என்று கொண்டாடுகின்றனர்.
    • பாலி மற்றும் இந்தோனேசிய வாழ் இந்துகள் இந்நாளை ‘நைபி’ என்றும் கொண்டாடுகின்றனர். 
    • தமிழ் சித்திரை வருடப் பிறப்பும் இந்த நாளும் அடுத்தடுத்த நாட்களில் கடந்த ஆண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.  
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....