Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகாஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

    காஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

    ஜம்மு மற்றும் காஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    ஜம்மு மற்றும் காஷ்மீரின் அவந்திபோரா பகுதியில் உள்ள வந்தக்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக தகவல் கிடைத்து. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மிர் காவல்துறையினர் இணைந்து அவர்களை தேடும் பணியை மேற்கொண்டனர். 

    இந்நிலையில், பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில், முதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற தகவல் வெளியானது. இதனை அடுத்து, மற்றொரு பயங்கரவாதியும் சுட்டு கொல்லப்பட்டார் என்ற தகவல்கள் வெளியானது. 

    இதுவரை இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மேலும், பயங்கரவாதிகளை தேடும் வேட்டையானது தொடர்ந்து நடைபெற்று வருவதாக காஷ்மிர் காவல்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....