Friday, March 24, 2023
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா22 யூ டியூப் சேனல்கள் முடக்கம் காரணம் என்ன? யார் முடக்கியது?

    22 யூ டியூப் சேனல்கள் முடக்கம் காரணம் என்ன? யார் முடக்கியது?

    மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் 22 யூ டியூப் சானல்களை முடக்கியுள்ளது. உக்ரைன் ரஷ்யா போரை முன்னிறுத்தி இந்தியாவின் நிலைப்பாடு குறித்து தேவையற்ற தவறான தகவல்களை வெளியிட்டு வந்ததால் 22 யூ டியூப் சானல்களை முடிகியுள்ளது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம். இதில் 18 சானல்கள் இந்தியாவில் செயல்பட்டதாகவும் 4 சானல்கள் பாகிஸ்தானில் செயல்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 18 சானல்கள் இந்தியாவில் இருந்தே இந்தியாவிற்கு எதிராக  செயல்பட்டு வந்தது.

    இந்த சானல்களில் ஜம்மு காஷ்மீர் மற்றும் இந்திய இராணுவம் குறித்து தவறான தகவல்கள் ஒளிபரப்பி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் உக்ரைன் ரஷ்யா போரில் இந்தியாவின் நிலைப்பாட்டினை தவறாக பிரதிபலித்தது என கூறியும் இந்த சானல்கள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தச் சானல்கள் தவறான மற்றும் போலியான அதவாது கிளிக் பைட் தம்பனைல்கள் மற்றும் டெம்ப்ளட்டுகள் பயன்படுத்தி கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பு தெரிவிக்கிறது. செய்தி வாசிப்பாளர்களின் புகைப்படங்களை வைத்து தவறான கருத்துக்களை பரப்பி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

    தேசிய பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு மற்றும் வெளிநாட்டு உறவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகார பூர்வமாக  மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. 

    இதுமட்டும் இன்றி மூன்று ட்விட்டர் கணக்குகள், ஒரு முகப்புத்தக கணக்கு, ஒரு இணையதளம் உள்ளிட்டவற்றையும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் முடக்கியுள்ளது.

    கடந்த ஆண்டு முதலே மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தவறான கருத்துக்களை பரப்பி வரும் அதவாது இந்தியாவின் இறையாண்மைக் கொள்கைக்கு எதிராக செயல்பட்டு வருகின்ற இணைய தள முகவரிகளை முடக்கி வருகிறது. 

    இந்நிலையில் 22 யூ டியூப் சானல்கள், மூன்று ட்விட்டர் கணக்குகள், ஒரு முகப்புத்தக கணக்கு, ஒரு இணையதளம் ஆகியவற்றை முடக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டும் இன்றி இது யூ டியூபேர்களையும் ஊடகங்களையும் பெரிதும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    chennai metro station

    மெட்ரோ பயணிகளின் கவனத்திற்கு! வாகனங்களை நிறுத்த புதியமுறை

    மெட்ரோ இரயில்‌ நிலையங்களில்‌ உள்ள வாகன நிறுத்துமிடங்களில்‌ பயணிகள்‌ தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பணம்‌ செலுத்துவதற்கு பதிலாக மெட்ரோ இரயில்‌ பயண அட்டை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்‌ என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  பணமில்லா...