Tuesday, May 16, 2023
மேலும்
  Homeசெய்திகள்அரசியல்சசிகலாவை சந்திக்க மறுக்கும் டிடிவி தினகரன்; குழப்பத்தில் தொண்டர்கள் !

  சசிகலாவை சந்திக்க மறுக்கும் டிடிவி தினகரன்; குழப்பத்தில் தொண்டர்கள் !

  சசிகலாவின் கணவர் நடராஜனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் விழாவில் சசிகலாவைச் சந்திப்பதை டிடிவி தினகரன் தவிர்த்ததால் அதிமுக மற்றும் அமமுகவினரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

  சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்திருக்கும் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் தோழியும் அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான சசிகலா அதிமுகவினை மீட்டெடுக்கும் முனைப்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அதிமுக தொண்டர்களைச் சந்தித்து வருகிறார். தற்பொழுது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். அவரின் இந்த அரசியல் சுற்றுப்பயணத்தில் சென்ற வாரம் திருச்செந்தூர் மற்றும் தென்மாவட்டங்களில் தொண்டர்களை நேரில் சந்தித்தார். இந்த வாரம் தஞ்சாவூர் சென்றுள்ள அவர் தன்னுடைய கணவர் மறைந்த நடராஜன் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முடிவு செய்திருந்தார். இது சசிகலா கணவர் நடராஜன் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் என்பதால் ஏற்பாடுகள் கொஞ்சம் விமரிசையாக செய்யப்பட்டிருந்தது. 

  இதற்கான முழு ஏற்பாடுகளையும் ஓ ராஜா முன்னின்று செய்தார். இந்த, ஓ ராஜா முன்னாள் முதல்வரும் தற்போதைய அதிமுகவின் முதன்மை ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஆவார். சமீப காலங்களில் சசிகலாவின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்ததால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

  இந்த நிகழ்வுக்கு முன்னதாகவே திருச்செந்தூரில்  சசிகலாவை நேரில் சந்தித்த ஓ ராஜா, அவருக்கு முன்பாகவே நினைவிடத்துக்குச் சென்று பணிகளைத் தொடங்கினார். வரும் வழியில் நிர்வாகிகளைச் சந்தித்து பேசிய சசிகலா ஆதிபராசக்தி உள்ளிட்ட முக்கியக் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினார். காலை 6.30 மணியளவில் விளார் பைபாசில் உள்ள நினைவிடத்துக்கு வந்த சசிகலா பூஜைகளைத் தொடங்கினார். முன்னதாக, தொண்டர்களிடம் பேசிய அவர் வரும் வழியில் தன்னைப் புகழும் வசனங்களுடன் பல பேனர்களைப் பார்த்ததாகவும், இது ஒன்றும் கொண்டாட்ட நிகழ்ச்சி இல்லை என்றும்  உடனே அவற்றை நீக்குமாறும் உத்தரவிட்டார். உடனே, பேனர்கள் நீக்கப்பட்டும் அதில் உள்ள வசனங்கள் மறைக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டன. உடன் சிஆர் சரஸ்வதி இருந்தார்.

  இதனையடுத்து பசுவை வைத்து நடைபெறும் கோ பூஜைகள் தொடங்கின. இந்நிகழ்விற்கு வந்திருந்த சசிகலாவின் உறவினர்கள் நின்றுகொண்டும், தரையில் அமர்ந்தும் இருந்த நிலையில் சசிகலா ஒரு நாற்காலியில் அமர்ந்து கண்ணீர் விட்டபடி இருந்தார். திருவருட்பா போன்ற பாடல்கள் பாடி பூஜைகள் நடைபெற்றது. பின்பு, சசிகலா வந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பூக்களை அருகில் இருந்து ஓ ராஜா எடுத்துக் கொடுத்தார். சசிகலாவின் உறவினர்களே பின்நின்ற நிலையில் புகைப்படங்கள் உட்பட அனைத்து நிகழ்வுகளிலும் ஓ ராஜா முன்னின்று செய்ததால் தொண்டர்கள் இதனைப்பற்றி முணுமுணுக்கத் தொடங்கினர். சசிகலா அஞ்சலி செலுத்திவிட்டு சென்றபின் காலை 10 மணியளவில் தான் டிடிவி தினகரன் நினைவிடத்துக்கு வந்தார். தேர்தலுக்கு முன்பாகவே தான் அரசியலை விட்டு விலகுகிறேன் என்று சசிகலா அறிவித்ததால் டிடிவி தினகரன், சசிகலா மீது கோபத்துடன் இருப்பதாக அவரின் நெருங்கிய வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. அதனால், அவரைச்  சந்திப்பதை தவிர்க்கவே தாமதாக வந்ததாகவும் தொண்டர்களிடையே பேச்சு எழுந்துள்ளது. ஓ ராஜாவுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மற்றும் டிடிவியின் தாமத வருகை ஆகியன கட்சியினரைக் கடும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....