Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவிசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர், உயிரிழந்த சம்பவம் - காவல்துறையினர் மீது புகார்!

    விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர், உயிரிழந்த சம்பவம் – காவல்துறையினர் மீது புகார்!

    திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த திரு. தங்கமணி என்பவர் அப்பகுதியில் சாராய விற்பனை செய்வதாக கூறி 26-04-2022 அன்று அவரை காவல் துறையினர் விசாரணைக்கு திருவண்ணாமலை அழைத்துச் சென்றனர். விசாரணைக்கு பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி அவர் திருவண்ணாமலை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

    அவருக்கு 27-04-2022 தேதி காலை வலிப்பு நோய் ஏற்பட்டதாக காவல் துறையின் சார்பில் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அன்று மாலையே அவர் உயிரிழந்துவிட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விசாரணைக்கு அழைத்துச் செல்லும்போது நல்ல உடல் நலத்துடன் இருந்த திரு. தங்கமணி அவர்கள் அதற்கு அடுத்த நாளே உயிரிழந்த சம்பவம் காவல் துறையினர் மீது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

    இப்படியாக சந்தேகம் அரும்பிய பிறகு, விசாரணைக்காக அழைத்துச் சென்ற தங்கமணியை காவல் துறையினர் கடுமையாகத் தாக்கியதன் காரணமாகத்தான் அவர் உயிரிழந்தார் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டி, இந்த மரணம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கச் சென்றபோது, காவல் துறையினர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கதவுகளை மூடியதோடு, அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளே அனுமதிக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

    மேலும், காவல் துறையினர் தனது தந்தையிடம் இரண்டு இலட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாகவும், அதை தர மறுத்ததால் தனது தந்தையை அடித்தே கொன்று விட்டதாகவும் உயிரிழந்த திரு. தங்கமணி அவர்களின் மகன் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது இந்த வழக்கை மாநில காவல்துறை விசாரித்து வருகிறது. 

    இருப்பினும், மாநில காவல்துறை விசாரித்தால் சரிவர தீர்ப்பு கிடைக்காது என்றும்,  ஆதலால், இந்த வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரணை செய்யும்படி ஆவணம் செய்ய வேண்டும் எனவும் தங்கமணியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

    சமீப காலமாக, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் பலவித துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். அண்மையில் கூட பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த திரு. விக்னேஷ் என்பவர் காவல் துறையினர் சித்ரவதை செய்ததன் காரணமாக உயிரிழந்தையும், அவருடன் கைது செய்யப்பட்ட திரு. சுரேஷ் பலத்த காயமடைந்ததையும் உதாரணமாக கூறலாம்.

    இப்படியான சம்பவங்கள் இனி நடைபெறா வண்ணம் இருக்க தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

    குல்தீப் சுழலில் சிக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்; முயன்ற ஷ்ரேயாஸ் ஐயர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....