Friday, March 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது; இருவர் பலி

    பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது; இருவர் பலி

    மத்திய பிரதேசத்தில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் பயிற்சி விமானியும், பயிற்சியாளரும் உயிரிழந்துள்ளனர். 

    உத்தர பிரதேசத்தில் உள்ள ரேபரேலியில் இந்திரா காந்தி தேசிய ஃபிளையிங் அகாடமி செயல்படுகிறது. முக்கியமான அகாடமியாக இது செயல்பட்டு வருகிறது. 

    இந்நிலையில், இந்த அகாடமியை சேர்ந்த பயிற்சி விமானம் நேற்று முன்தினம் மகாராஷ்டிராவின் பிர்ஸி விமான தளத்தில் இருந்து புறப்பட்டது. இந்த விமானத்தை இமாச்சலை சேர்ந்த பயிற்சியாளர் மோகித் தாக்குரும் (25), குஜராத்தை சேர்ந்த பயிற்சி விமானி மகேஸ்வரியும் (20) இயக்கினர்.

    அப்போது மத்திய பிரதேசத்தில் உள்ள கிர்னாபூர் பகுதியில் விமானம் எதிர்பாரா வகையில் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதையடுத்து, தேடுதல் வேட்டையில் மத்திய பிரதேச காவல்துறை ஈடுப்பட்டனர். 

    நேர்ந்த விபத்தில் இரு விமானிகளுமே உயிரிழந்தனர். மேலும், இருவரது உடல்களையும் மத்திய பிரதேச காவல்துறை மீட்டது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. 

    போளூர் ஆடு சந்தை; இரண்டு கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....