Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாடு முழுவதும் இன்று மாபெரும் தடுப்பூசி முகாம்! அதிக மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பு !

    தமிழ்நாடு முழுவதும் இன்று மாபெரும் தடுப்பூசி முகாம்! அதிக மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பு !

    உலகையே உலுக்கி வந்த கொரோனா தமிழ்நாட்டுக்கும் வந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த வருடம் சனவரி மாதம் முதல் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 26 ஆவது மிகப் பெரிய தடுப்பூசி முகாம் இன்று தமிழ்நாடு முழுவதும் 50,000 மையங்களில் நடைபெறுகிறது. மிகப் பெரிய முகாம் என்பதால் அதிக மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முதலில் 18 முதல் 60 வயது வரை உட்டபட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. பிறகு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது. இப்போது 12 வயது முதல் 14 வரை உள்ள சிறார்களுக்கு முதலாம் தவணை தடுப்பூசிகள் போடப்பட்டன.

    இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே இருபத்து ஐந்து லட்சத்திற்கும் மேல் உள்ளனர். மேலும் முதல் தவணை செலுத்தாமல் உள்ளவர்கள் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். தமிழ்நாடு சுகாதாரத் துறைக்கு இது  பெரும் சவாலாக இருந்து வருகிறது. 

    இந்திய அளவை பொறுத்தவரையில் 82.4 கோடி மக்கள் முதல் மற்றும் இரண்டாம் தவணையை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளனர். இருப்பினும் தடுப்பூசி செலுத்துவது அந்தந்த மாநிலம் வாரியாக முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

    இன்று தமிழ்நாட்டில் 50 ஆயிரம் மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடந்து வருகின்றன. முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை இதுவரை செலுத்திக் கொள்ளாதவர்கள் இன்று உடனடியாக செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை விடவும் மற்றும் தொற்று எண்ணிக்கையில் சென்னை முதல் மாவட்டமாகவும்  உள்ளதால் 1600 மையங்களில் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. 

    நேற்று சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகமான ஆலந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், “ வரும் ஜூன் மாதம் நான்காம் அலை வர வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாகவும், இதனைக் கட்டுப்படுத்த ஒரே வழி தடுப்பூசி செலுத்திக் கொள்வது தான் என்றும் தெரிவித்தார். மேலும் தடுப்பூசிக் செலுத்திக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியதாகவும்” கூறினார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....