Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுபலம் பெறுகிறதா டெல்லி அணி? புது வியூகம் வகுக்குமா லக்னோ? - இன்றைய ஐபிஎல் போட்டி!

    பலம் பெறுகிறதா டெல்லி அணி? புது வியூகம் வகுக்குமா லக்னோ? – இன்றைய ஐபிஎல் போட்டி!

    15 ஆவது ஐபிஎல் தொடரின், 15 ஆவது போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

    டெல்லி கேபிடல்ஸ் 

    டெல்லி கேபிடல்ஸ் அணியானது நிகழ்ந்துக்கொண்டிருக்கும் 15 ஆவது ஐபிஎல் தொடரில் இதுவரை இரு போட்டிகளில் விளையாடியுள்ளது. இரண்டு போட்டியில் ஒன்றில் வெற்றியும், மற்றொன்றில் தோல்வியையும் கண்டுள்ளது. 

    இந்த ஐபிஎல் ஆரம்பித்தில் இருந்து டெல்லி அணியானது தீவிரமாக இயங்கவில்லை என்றே தோன்றுகிறது. இரு போட்டிகளிலுமே முதல் ஆறு ஓவர்களில் அதாவது பவர் பிளேவில் டெல்லி அணி முற்றிலுமாய் சொதப்பி வருகிறது. இரு போட்டிகளையும் சேர்த்து இதுவரை பவர்பிளேவில் மட்டுமே டெல்லி அணியானது ஆறு விக்கெட்டுகளை இழந்திருக்கிறது.

    இவை மிகவும் மோசமான நிலையாகும். டெல்லி அணிக்கு இன்று நடக்கவிருக்கும் நல்லது என்னவென்றால் வார்னரும், நோர்க்யாவும் அணிக்கு திரும்புவதுதான். பவர்பிளேவில் வார்னர் அவர்களின் ஆட்டத்திறன் அபாரமாக இருப்பதால் டெல்லி அணி பலப்படும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

    ராபாடாவையும், அவேஷ் கானையும் வேறு அணிகளுக்கு டெல்லி விட்டுக்கொடுத்தப் பிறகு, டெல்லி அணியில் பந்துவீச்சில் வீரியம் குறைவாகவே இருக்கிறது. நோர்க்யாவின் வருகை இதை சரிசெய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

    லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 

    நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டிகளில் இரு போட்டிகளில் வென்றுள்ளது. அணியின் நான்காவதுப்போட்டி இன்று நடைபெற உள்ளது. 

    லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை பொறுத்தவரையில் பலம் வாய்ந்தவர்களாகவே திகழ்கின்றனர். போட்டியில் யாரேனும் ஒருவர் சொதப்பினாலும் அதை மற்றொருவர் சரிசெய்து விடுகின்றனர். பந்துவீச்சில் அவேஷ் கான் தொடர்ந்து நம்பிக்கை அளிக்கிறார். 

    இன்றையப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி டெல்லி அணிக்கான வியூகத்தை சரிவர அமைக்க வேண்டும். ஏனென்றால், டெல்லி அணியில் புதிதாக களமிறங்க இருக்கும் வார்னரின் திறமை குறித்து அனைத்து அணிகளும் அறிவர். 

    லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி அணியைப்போலவே பவர்பிளேவில் சீக்கிரமாக விக்கெட்டுகளை இழந்து வருகின்றன. இது லக்னோ அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

    இரு அணிகளும் மோதிக்கொள்ளும், இப்போட்டியானது நவி மும்பையில் உள்ள, டி. ஒய். பாட்டில் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணியளவில் நடைபெற இருக்கிறது. இரு அணிகளும் இன்று சம பலத்துடன் காணப்பட இருப்பதால் போட்டியானது விறுவிறுப்பாக இருக்கும் என்றே எதிரப்பார்க்கப்படுகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....