Monday, March 18, 2024
மேலும்
    Homeபிரேக்கிங் நியூஸ்தொடரும் தோல்விப் பயணத்தை கைவிடுமா மும்பை இந்தியன்ஸ்?

    தொடரும் தோல்விப் பயணத்தை கைவிடுமா மும்பை இந்தியன்ஸ்?

    இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த ஐபிஎல் தொடரானது மோசமானதாக சென்றுக் கொண்டிருக்கிறது என்றே கூற வேண்டும். 

    மும்பை இந்தியன்ஸ் 

    இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி இரு போட்டிகளில் விளையாடியிருந்தாலும் வெற்றி கணக்கை தொடங்கவே இல்லை. அணி பார்ப்பதற்கு பலம் பொருந்திய அணியாய் தெரிந்தாலும் ஆட்டம் என்று வருகையில் சோபிக்க மறந்துவிடுகிறார்கள். 

    மும்பை அணி பேட்டிங்கிலும் சரி, பவுலிங்கிலும் சரி, சரிப்படுத்த வேண்டியதென்பது பல உள்ளது. குறிப்பாக பேட்டிங் பொறுத்தவரையில் தொடக்கத்தில் இஷான் கிஷன், திலக் வர்மா ஆகியோர் நம்பிக்கைத் தந்தாலும், ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் களமிறங்கும் பேட்ஸ்மென்கள் சோபிக்கத் தவறுவதுதான் மும்பை அணிக்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. 

    பந்துவீச்சில் பும்ராவுக்கு துணை தேவைப்படுகிறது. ஒருபக்கம் பும்ரா விக்கெட்டுகள் எடுத்தாலும் அவருக்கு இணையாக விக்கெட்டுகள் எடுக்க மற்ற பந்துவீச்சாளர்கள் மறந்துவிடுகின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரையில் இடதுகை சுழற்பந்து வீச்சாளர்கள் தேவை. 

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 

    கொல்கத்தா அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால் இப்போட்டியில் உத்வேகத்துடன் களமிறங்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது. உமேஷ் யாதவ் மிகவும் சிறப்பாக விளையாடி வருவது கொல்கத்தா அணிக்கு முக்கிய விடயமாய் இருக்கிறது. 

    அதே சமயம், கொல்கத்தா அணியின் பந்து வீச்சானது இறுதி ஓவர்களில் பலவீனமாக உள்ளது. இன்று கொல்கத்தா அணி அதையும் சரிசெய்து விடும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் பேட் கம்மின்ஸின் வருகை கொல்கத்தா அணிக்கு பலம் சேர்க்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

    ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக்கொள்ளும் போட்டியானது, புனேவில் உள்ள மாகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணியளவில் தொடங்க இருக்கிறது. 

    புனே மைதானத்தைப் பொறுத்தவரையில் முதலில் பேட்டிங் செய்பவருக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால், டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கைத் தேர்ந்தெடுக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியதில் மும்பை இந்தியன்ஸ் அணி 22 முறையும், கொல்கத்தா அணி 7 முறையும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....