Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுவெற்றிக் களிப்பில் உள்ள அணியும், தோல்வியின் வலியில் உள்ள அணியும் இன்று மோதல்! - யாருக்கு...

    வெற்றிக் களிப்பில் உள்ள அணியும், தோல்வியின் வலியில் உள்ள அணியும் இன்று மோதல்! – யாருக்கு சாதக சூழல்!

    விறுவிறுப்பாக நடந்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் இன்றையப்போட்டியில், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மயங்க் அகர்வால் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாட உள்ளது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 

    கொல்கத்தா அணி இதுவரை விளையாடியுள்ள இரண்டு போட்டிகளில், ஒரு போட்டியில் வெற்றியும் மற்றொரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது.

    கடந்தப் போட்டியின்போது கொல்கத்தா அணியானது பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியிடத்தில் தோல்வியைத் தழுவியது. பெரிதும் நம்பப்பட்ட கொல்கத்தா அணியின் பேட்டிங்கானது பெங்களுர் அணிக்கு எதிராக சொதப்பியது என்பதுதான் உண்மை.

    பெங்களுருக்கு எதிரானப் போட்டியில் அதிகபட்ச ரன்னாகவே ரசல் அடித்த 25 ரன்கள்தான் இருந்தது. ஆதலால், இம்முறை பேட்டிங்கில் கவனம் செலுத்துவது என்பது அவசியமாகிறது. 

    கொல்கத்தா அணியின் பந்துவீச்சிலும் தடுமாற்றங்களை நம்மால் காண முடிந்தது. இறுதி ஓவர்களில் ரசல் பந்துவீச்சில் இயல்பான தீவிரத்தன்மை இல்லை. உமேஷ் யாதவ் மற்றும் டிம் சவுதி ஆகியோரின் பந்துவீச்சு ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. 

    கடந்தப் போட்டியின்போது பெற்ற அனுபவங்களைக் கொண்டு இன்றையப் போட்டியில் கவனமாகவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களமிறங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

    பஞ்சாப் கிங்ஸ் 

    பஞ்சாப் கிங்ஸ் அணியானது கடந்தப் போட்டியில் பெற்ற வெற்றியின் உற்சாகத்தில் இன்றையப் போட்டியில் களமிறங்கும். மேலும் குவாரண்டைனில் இருந்த ராபாடா தற்போது அணிக்குத் திரும்பியுள்ளது பஞ்சாப் அணியின் பந்துவீச்சுக்கு அதீத நம்பிக்கையைக் கொடுத்திருக்கும். 

    பேட்டிங்கில் கடந்த முறை பஞ்சாப் கிங்ஸ் அணியானது நன்கு திறமையை வெளிப்படுத்தினாலும், பந்துவீச்சில் சொதப்பியது குறிப்பிடத்தக்கது. விக்கெட்டுகளை வீழ்த்துவதிலும் சரி, ரன்களைக் கட்டுப்படுத்துவதிலும் சரி கடந்தப்போட்டியில் பஞ்சாப் அணியின் பந்துவீச்சு சரிவர செயல்படவில்லை என்பது உண்மை.

    தெரிந்துக்கொள்ள ; 
    • இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர் மோதியதில் கொல்கத்தா அணி 19 போட்டியிலும், பஞ்சாப் அணி 10 போட்டியிலும் வெற்றிப்பெற்றுள்ளது.
    • கொல்கத்தா அணியின் வீரர்களான சுனில் நரைன் மற்றும் நிதிஷ் ராணா இதுவரை பஞ்சாப் அணியின் வேகப்பந்துவீச்சில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்ததில்லை.
    • வான்கடே மைதானத்தில் இறுதியாய் விளையாடிய 12 போட்டிகளில் கொல்கத்தா அணி இரண்டு போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. 

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டியானது இன்று இரவு 7:30 மணியளவில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்கவிருக்கிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....