Monday, March 18, 2024
மேலும்
    Homeஜோதிடம்உங்களுக்கு இன்று என்ன நடக்கப்போகிறதென அறிய ஆவலா? இதோ, இன்றைய ராசி பலன்கள்!

    உங்களுக்கு இன்று என்ன நடக்கப்போகிறதென அறிய ஆவலா? இதோ, இன்றைய ராசி பலன்கள்!

    5-05-2022  ராசிபலன்கள்:

    மேஷம்:

    இன்று குறைவான பண வளர்ச்சி காரணமாக குறைந்த பண வரவு காணப்படும். பணத்தை திறமையுடன் கையாள வேண்டியது அவசியம். இன்று பணிச்சுமை கடினமாக காணப்படும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும். ஆரோக்கியக் குறைபாடு காரணமாக உங்கள் பணிகளை விரைந்து ஆற்ற இயலாது.

    நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் செயல்பட்டால் நீங்கள் சாதகமான பலன்களைப் பெறலாம்.

    ரிஷபம்:
    உங்கள் மனதில் காணப்படும் உறுதி காரணமாக உங்கள் பணியில் முன்னனியில் இருப்பீர்கள். இன்று உங்கள் துணையுடன் இனிமையாகப் பேசி இன்றைய நாளை சந்தோஷமாக கழிப்பீர்கள்.

    பணத்தை உங்கள் சொந்த தேவைக்கு பயன்படுத்துவீர்கள் மற்றும் சேமிப்பீர்கள். உங்கள் நோக்கம் நிறைவேறும் வகையிலான நல்ல முடிவுகளை நீங்கள் எடுப்பீர்கள்.

    மிதுனம்:
    அதிகரிக்கும் குடும்ப பொறுப்புகள் காரணமாக இன்று அதிகமாக செலவு செய்ய நேரும். இன்று அதிர்ஷ்டம் குறைவாக காணப்படும் நாள். எந்த முயற்சி எடுத்தாலும் அதை குறித்த நேரத்தில் முடிப்பது சிறிது கடினமாக இருக்கும்.

    உங்கள் துணையால் நீங்கள் புறக்கணிக்கப் படுவது போல உணர்வீர்கள். நீங்கள் பிறரிடம் உரையாடும் போது கவனமாக இருக்க வேண்டும்.

    கடகம்:
    இன்று சற்று அனுகூலமற்ற நாளாக இருக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க இயலாத நிலை இருக்கும். இன்று பொறுமை அவசியம். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ளுங்கள்.

    செலவுகள் அதிகமாக இருக்கும். உங்கள் தேவைகளுக்காக கடன் வாங்குவீர்கள்.

    சிம்மம்:
    இன்று சிறந்த நாளாக இருக்கும். நீங்கள் இன்று விரைந்து செயலாற்றுவீர்கள். இதனால் திருப்தி ஏற்படும். இன்று பயணங்களால் ஆதாயம் ஏற்படும். இன்று வளர்ச்சி பெறுவது உறுதி.

    உங்கள் நலன் குறித்த முக்கிய முடிவு எடுக்க உங்கள் துணை உங்களுக்கு வழி காட்டுவார். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

    கன்னி:
    இன்று உங்களுக்கு முன்னேற்றம் எளிதில் கிடைக்கும். சிறிதளவு முயற்சியாயினும் வெற்றி நிச்சயம். உங்கள் திறமை வெளிஉலகத்தில் பளிச்செனத் தெரியும். இன்று தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.

    இன்று உங்களிடம் பணம் மிகுதியாக காணப்படும். அதை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். உங்கள் துணையிடம் மனம் திறந்து பேசுவீர்கள். இது உங்கள் துணையை திருப்திபடுத்தும்.

    துலாம்:
    இன்று சிறந்த வளர்ச்சி காணப்படும். உங்கள் சிறிய முயற்சியின் மூலம் பெரிய வெற்றி காண்பீர்கள். இன்று நீங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். உங்கள் துணையுடன் நட்பான முறையில் பழகுவீர்கள். இதனால் மகிழ்ச்சி நிலவும்.

    இன்று நிதிநிலைமை சாதகமாக இருக்கும். உங்கள் சேமிப்பு ஆற்றல் அதிகரிக்கும்.

    விருச்சிகம்:
    இன்று அசௌகரியங்கள் காணப்படும்.அதற்கு உங்கள் மனஅழுத்தங்கள் காரணமாக இருக்கலாம். மன அழுத்தத்தைக் குறைக்க நல்ல இசையை கேட்பது திரைப்படங்கள் பார்ப்பது போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளுங்கள். மகிழ்ச்சி கிடைக்கும்.

    நீங்கள் உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்படுவீர்கள். இது உறவில் அமைதியையும் நல்லினக்கதையும் பாதிக்கும். இன்று பணத்தை கையாள்வது கடினமாக இருக்கும். பண இழப்பிற்கான அதிகமான வாய்ப்புகள் இன்று காணப்படுகின்றன.

    தனுசு:
    இன்று மந்தமாக காணப்படுவீர்கள்.சுறுசுறுப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.நல்லதையே நினையுங்கள்.

    உங்கள் பணிகளை திறமையாக ஆற்றுவதில் சில ஏமாற்றங்களோ அல்லது தடைகளோ காணப்படும். உங்கள் சகபணியாளர்களுடனான உங்கள் தொடர்பாடல் நற்பலன்களை அளிக்காது.

    உங்கள் துணையுடன் சூடான விவாதம் நடக்க வாய்ப்புள்ளது கவனத்துடன் இருக்கவும். இன்று செலவுகள் தவிர்க்க முடியாது. எனவே செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

    மகரம்:
    இன்று வெற்றிகரமான நாளாக இருக்கும். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடியும். நீங்கள் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.

    உங்கள் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் திறமைகள் பாராட்டைப் பெறும். உங்கள் செயல்திறன் மூலம் உங்களுக்கு கூடுதல் நன்மைகள் கிடைக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான நினைவுகளை பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் துணையுடன் உறவில் நல்லிணக்கம் காணப்படும்.

    கும்பம்:
    இன்று துடிப்பான நாளாக இருக்கும். உங்கள் இலட்சியங்களை அடைவதற்கு உகந்த நாள். நீங்கள் உங்களுக்கென சில செயல்களை அமைத்துக் கொண்டு அதில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் துணையுடன் நட்பான முறையில் பழகுவீர்கள். இதனால் மகிழ்ச்சி நிலவும்.

    இன்று பணம் மிகுதியாக காணப்படும். பணத்தை பயனுள்ள வகையில் நல்ல காரியங்களுக்கு பயன் செய்வீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு சௌகரியங்கள் வழங்கும் என்பதால் நீங்கள் இன்று நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.

    மீனம்:
    இன்று குறைந்த பலன்களே கிடைக்கும். இன்று சில ஏமாற்றங்களைக் காண்பீர்கள். எல்லாவற்றையும் நட்பு முறையோடு அணுகுங்கள்.நீங்கள் அதிகமாக பணியாற்ற வேண்டியிருக்கும். அது உங்களுக்கு கவலையை உண்டாக்கும்.
    பணியாற்றும் முறையை திட்டமிட்டு அதற்கேற்றாற் போல செயலாற்ற வேண்டும். உங்கள் துணையுடன் சுமுகமான உறவு காணப்படாது. அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும்.

    உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்ய நேரும்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....