Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்இன்றைய தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் ! அதிர்ச்சியில் மக்கள் !

    இன்றைய தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் ! அதிர்ச்சியில் மக்கள் !

    உக்ரைன் ரஷ்யா போரின் காரணமாக விலைவாசி உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில நாட்களாக அதிக ஏற்றத்துடனும் அவ்வப்போது சிறிது குறைந்தும் வந்தது. 

    ஆனால், இன்று ஒரு கிராமின் (22 கேரட்)  விலை 4,910 ரூபாயாக சென்னையில் இன்று விற்கப்படுகிறது. நேற்று 5,010 ரூபாயாக ஒரு கிராமின் விலை இருந்தது. 

    8 கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று 40,160 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், 880 ரூபாய்க் குறைந்து 39,280 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

    தூயத் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 5,419 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 5,309 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 43,352 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 880 ரூபாய்க் குறைந்து  42,472 ரூபாய்க்கு  விற்கப்படுகிறது. 

    ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை மற்ற நகரங்களில்,

    கேரளாவில் ரூபாய் 5,020 

    ஹைதராபாத்தில் ரூபாய்  4,820 gold jewellery

    பாண்டிச்சேரியில் ரூபாய் 5,108

    மும்பையில் ரூபாய் 4,820

    கொல்கத்தாவில் ரூபாய் 4,802 

    டெல்லியில் ரூபாய் 4,820

    போன்ற நகரங்களில் சிறிய மாறுதல்களுடன் விற்கப்படுகிறது.

    வெள்ளியின் விலை நிலவரத்தைப் பொறுத்தவரையில் இன்று சற்றுக் குறைந்து உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 76.70 நேற்று விற்கப்பட்ட நிலையில் இன்று 74.10 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 74,100 ரூபாய்க்கு சென்னையில் விறக்கப்படுகிறது.

    விலைக் குறைவதற்குள் பணம் இருந்தால் ஓடி வாங்கி வைத்துக் கொள்ளுங்கள், தங்கத்தின் விலை எப்போது ஏறும் என்றே கணிக்க முடிவதில்லை இப்போதெல்லாம்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....