Monday, March 20, 2023
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்தொடர்ந்து ஏறிய படியே இருக்கும் தங்க விலை ; இப்படியே இருந்தா எப்படி?

    தொடர்ந்து ஏறிய படியே இருக்கும் தங்க விலை ; இப்படியே இருந்தா எப்படி?

    இரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தமையால் உக்ரைன் நாடு மட்டும் அல்ல உலக அளவில் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. பல நாடுகள் இரஷ்யாவின் மீது பொருளாதார தடையை அமல்படுத்தி வருகின்றன. இப்போரால் பொருளாதாரத்தில் பல நாடுகளில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்து காணப்பட்டு வருகிறது. 

    russia

    முகூர்த்த நாள்கள் நிறைய நெருங்க, பலரும் நகைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் தினம் உயரும் நகையின் விலை, நகைகளை வாங்க ஆர்வம் காட்டுபவர்களை தங்கத்தின் விலை யோசித்து வைத்துவிடுகிறது. ஆம்! இன்றை நேற்றோடு ஒப்பிட்டுப்பார்த்தாலே, ஆபரணத் தங்கம் சவரனுக்கு 580 ரூபாயும், தூயத்தங்கம் சவரனுக்கு 600 ரூபாய்க்கும் உயர்ந்துள்ளது. வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை உயரும் என்றே கணிக்கப்பட்டு வருகிறது.

    சென்னையில் இன்று, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை  4,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 38,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் நேற்றைய விலையை விட இன்று சவரனுக்கு 580 ரூபாய் அதிகரித்திருக்கிறது.

    gold-rates

    ஒரு கிராம் தூயத் தங்கம் 5,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூயத் தங்கம் 42,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தூயத் தங்கம் நேற்றைய விலையை விட இன்று சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்து காணப்படுகிறது.

    ஒரு கிராம் வெள்ளி 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 70,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    bjp leader

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி- பாஜக அண்ணாமலை

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  இந்த ஆண்டுடின் முதல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர்...