Wednesday, March 20, 2024
மேலும்
    Homeஆன்மிகம்திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா! கொடியேற்றத்துடன் தொடங்கியது

    திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா! கொடியேற்றத்துடன் தொடங்கியது

    திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முதல் நாளான இன்று தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொள்வர். 

    அதன்படி, இந்த ஆண்டு இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவின் முதல் நாளான இன்று தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

    தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 6 கால் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அடுத்த நாள் 6 ஆம் தேதி, முற்பகலில் சிறிய தேரோட்டம் நடைபெறும். அன்றைய தினமே இந்தத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மாலை 6 மணிக்கு மேல் கோயிலுக்குள் பாலதீபமும், மலையில் மகா கார்த்திகை தீபமும் ஏற்றப்படுகிறது. 

    இதையடுத்து, இரவு 8 மணிக்கு பதினாறுகால் மண்டபம் அருகே சொக்கப்பனை கொளுத்தல் நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் இறுதி நாளான 7 ஆம் தேதி பகல் 12 மணிக்கு சரவண பொய்கையில் தீர்த்த உற்சவம் நடைபெறுகிறது. 

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், தொற்று பரவல் குறைந்துள்ளதால், வருகிற 6 ஆம் தேதி எப்போதும் போல் தேரோட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    துணிவு திரைப்படத்தில் பாடிய மஞ்சு வாரியர்; டிரெண்டாகும் ஹேப்பி ட்விட்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....