Monday, March 18, 2024
மேலும்
    Homeவாகனம்ட்ரையாம்ப் டைகர் நிறுவனம் தன்னுடைய ஸ்போர்ட்ஸ் பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது : விலை எவ்வளவு...

    ட்ரையாம்ப் டைகர் நிறுவனம் தன்னுடைய ஸ்போர்ட்ஸ் பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது : விலை எவ்வளவு தெரியுமா?

    தன்னுடைய புதிய ஸ்போர்ட்ஸ் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது ட்ரையாம்ப் டைகர் நிறுவனம். இந்த புதிய ட்ரையாம்ப் டைகர் ஸ்போர்ட்ஸ் 660-ன் ஆரம்ப விலையாக 8.95 லட்சத்தை நிர்ணயித்துள்ளது அந்நிறுவனம். இந்திய சாலைகளில் பயணம் செய்ய ஏதுவான இந்த புதிய பைக்கை இந்திய ஷோரூம்களும் முன்பதிவு செய்யத்  தொடங்கி விட்டன.

    இந்த ட்ரையாம்ப் டைகர் ஸ்போர்ட்ஸ் 660 அதனுடைய இன்ஜின் மற்றும் பெரும்பாலான இதர பாகங்களை ட்ரைடென்ட் நிறுவனத்தின் பாகங்களைப்போலவே கொண்டுள்ளது. இந்த டைகர் ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் வரிசையில் டைகர் ஸ்போர்ட்ஸ் 850, டைகர் ஸ்போர்ட்ஸ் 900 மற்றும் டைகர் ஸ்போர்ட்ஸ் 1200 ஆகியவை விரைவில் இணைய உள்ளன. இதன் ஆரம்பமாகவே டைகர் ஸ்போர்ட்ஸ் 660 வெளியாகி உள்ளது. 

    இதன் இன்ஜின் அமைப்பு மற்றும் உதிரி பாகங்கள் ட்ரைடென்ட் பைக்குகளை ஒத்துள்ளன. இதன் இன்ஜின் முகப்பும் ட்ரைடென்ட் பைக்குகளையே ஒத்துள்ளது. 

    ட்ரைடென்ட் பைக்குகளில் நாம் பார்த்தது போலவே 81பிஎச்பியுடன் 10,250 ஆர்பிஎம் மற்றும் 64என்எம் உடன் 6,250ஆர்பிஎம்மும் கொண்டுள்ளது டைகர் ஸ்போர்ட்ஸ் 660. மேலும், இது மூன்று கேஸ் சிலிண்டர்களைக் கொண்டுள்ளது. 

    ட்ரைடென்ட் பைக்குகளைப் போலவே இதில் 6 கியர் பாக்ஸுகளும், விருப்பதின் அடிப்படையில் இதில் வேகமான ஷிப்ட்டரும் உள்ளன. இதில் சாதாரண மற்றும் மழைக்கு ஏற்றவாறு என இரண்டு முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

    இந்த டைகர் ஸ்போர்ட்ஸ் 660 சாலைகளுக்கு ஏற்ற இன்ஜினையும், அதற்கு ஏற்ற இதர பாகங்களையும் கொண்டுள்ளது. இதில் ஸ்போக் இல்லாத சக்கரமும், நீண்ட பயணங்களுக்கு ஏற்ற பெரிய ஸ்பிரிங்கும் இல்லை. மேலும், இது ஷோவா 41எம்எம் யுஎஸ்டியில் தேவைக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கூடிய ஸ்பிரிங்கில் செயல்படுகிறது டைகர் ஸ்போர்ட்ஸ் 660. நீண்ட பயணங்களுக்கு ஏற்ற மிச்செலின் ரோட் 5 டயர்கள் இதில் பொறுத்தப்பட்டுள்ளது. 

    இந்த அட்டகாசமான பைக்கில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் அளவில் 835மில்லி மீட்டர் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இது ஏடிவி உடன் ஒப்பிடுகையில் சிறப்பாகவும், ஆனால் ரைடர்களுக்கு ஏற்ற வகையில் சற்று குறைவாகவும் உள்ளது.

    எடையின் அடிப்படையில் இந்த டைகர் ஸ்போர்ட்ஸ் 660 சிறப்பான ரைடுக்கு ஏற்ற வகையில் அட்டகாசமான 202 கிலோவைக் கொண்டுள்ளது. இதனுடன் சேர்த்து ஸ்மார்ட்போன் இணைக்கும்திறன் கொண்ட சூட் மற்றும் எல்ஈடி விளக்கு அமைப்பும் கிடைக்கிறது. 

    இதனை மூன்று நிறங்களில் வெளியிடுகிறது டைகர் நிறுவனம். இந்த டைகர் ஸ்போர்ட்ஸ் 660 பைக்கானது லூசர்ன் ஊதா மற்றும் ஷாப்பைர் கறுப்பு, க்ராபைட் மற்றும் ஷாப்பைர் கறுப்பு, கோரோஷி சிவப்பு மற்றும் க்ராபைட் நிறங்களில் வெளியாகின்றன.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....