Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகோடை தொடங்கியதால் சாதாரணமாக சாலையைக் கடக்கும் புலி!

    கோடை தொடங்கியதால் சாதாரணமாக சாலையைக் கடக்கும் புலி!

    நீலகிரி மாவட்டம், கூடலூர் வனப்பகுதியில் புலிகள் சாதாரணமாக சாலையைக் கடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர். அதனால் வனத்துறை வாகன ஓட்டிகளுக்கு கவனமாகச் செல்ல அறிவுறுத்தி இருக்கின்றனர். முதுமலை வனப்பகுதிக்கு உட்பட்ட கார்குடி பகுதியில் சாலையில் அமைதியாய் நடந்து செல்கின்றன அக்காட்டு புலிகள்.

    நேற்று மாலை பொழுதில் ஒரு புலி சாலையைக் கடந்துள்ளது. அப்போது வாகன ஓட்டிகள் வண்டிகளை நிறுத்தி விட்டு சிறிது நேரம் காத்திருந்து பிறகு செல்கின்றனர். அப்போது அவர்கள் வைத்திருந்த செல்போனில் அப்புலி செல்லும் காட்சிகளை வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் இணைய தளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. 

    இதனால் வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விலங்குகள் கோடை தொடங்கி உள்ளதால், தண்ணீர் உணவிற்கு இடம்பெயர்ந்து சென்று பசியாறி விட்டு வரலாம் என்று கூறப்படுகிறது. mudumalai tiger

    மேலும் வருகின்ற கோடைக்காலத்தில் இன்னும் அதிகமான விலங்குகள் இப்படி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இன்னும் அதிகமாக இருந்தால் கடந்த ஆண்டுகளை போல விலங்குகளுக்கு செயற்கை நீர்த்த தொட்டிகள் அமைக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  

    மனிதர்களே வெயிலின் சூட்டைத் தணிக்க வழி தெரியாமல் முழித்து வருகின்றனர். பாவம் வாயில்லாத சீவன்கள் என்ன செய்யும்? 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....