Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குடிரைலர்ஆக்‌ஷன், கலாட்டா , திருப்புமுனைகளுடன் கலக்கும் 'மகான்' முன்னோட்டம்!

    ஆக்‌ஷன், கலாட்டா , திருப்புமுனைகளுடன் கலக்கும் ‘மகான்’ முன்னோட்டம்!

    விக்ரம் நடிப்பில் வரும் பத்தாம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ள திரைப்படம்தான், மகான்! தற்போது மகான் திரைப்படத்தின் முன்னோட்டம் (trailer) வெளியாகி சமூக வலைதளங்களையும், ரசிகர்களின் மனதினையும் ஆக்கிரமித்து வருகிறது. பல நாட்களுக்கு பிறகு தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு ‘ஒரு கேங்ஸ்டர் திரைப்படம் நல்ல கதைக்களத்துடன் காத்திருக்கிறது’ என்ற உணர்வைத் தரவல்லதாகவே மகான் திரைப்படத்தின் முன்னோட்டம் அமைந்திருக்கிறது. 

    காந்தியை போல தன் மகனை வாழ வைக்க நினைக்கும் தகப்பனுக்கு பிறந்த காந்தி மகானாய் விக்ரம் இப்படத்தில் நடித்துள்ளார். இத்தகைய காந்தி மகான் ஒரு பருவத்திற்கு மேல், ஒரு விரக்திக்கு மேல் மது சாம்ராஜ்யத்தின் மகானாய் மாறிவிடுகிறார். மது ஒழிப்புக்கு குரல் கொடுக்க முயன்ற விக்ரம் மது விற்பனைக்கு அதிபதியாகிறார். அதன் பின்பு மீண்டும் மது சாம்ராஜ்யத்தின் மகான், காந்தி மகானாய் மாறும் நிகழ்வு அரங்கேறுமா? அவ்வாறு அரங்கேறினால் அது எப்படி அரங்கேறியிருக்கிறது போன்றவைதான் மகானின் கதைக்களமாய் தெரிகிறது. 

    விக்ரமின் மனைவியாக சிம்ரனும், மகனாக துருவ் விக்ரமும் நடித்துள்ளனர். மகனும் தந்தையும் ஒருசேர நடித்திருப்பது திரைப்படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    கதையை பொறுத்தவரையில் எப்படி வேண்டுமானாலும் திரைக்கதையைக் கொண்டுப்போகலாம் ஆனால் கார்த்திக் சுப்பராஜ் இரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்‌ஷன், கலாட்டா , திருப்புமுனைகள் போன்றவற்றை திரைக்கதையில் வைத்துள்ளதாகவே மகான் திரைப்படத்தின் முன்னோட்டம் நமக்கு காண்பிக்கிறது. 

    இதையும் பாருங்க; https://www.dinavaasal.com/special-photos-of-the-soon-to-be-released-movie-mahan/

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....