Friday, March 31, 2023
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தளபதி விஜய் அவர்கள் பாடிய பாடல் நூறு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை! இரசிகர்கள் கொண்டாட்டம்!

    தளபதி விஜய் அவர்கள் பாடிய பாடல் நூறு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை! இரசிகர்கள் கொண்டாட்டம்!

    மற்ற திரைப்படங்களை விடவும் தளபதி விஜய் அவர்களின் திரைப்படங்களின் பாடல்கள் பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவிடும். விஜய் அவர்கள் திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த காலக்கட்டத்தில் இருந்தே அவரின் திரைப்படப் பாடல்கள் அதிக கவனம் பெறுவது வாடிக்கையாக நிகழ்ந்துவருகிறது. 

    vijayதற்போது கூட தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் ஏப்ரல் வெளியிடாக வரவிருக்கும் பீஸ்ட் திரைப்படத்தில் இருந்து வெளியான அரபிக்குத்து பாடல் பலரையும் கவர்ந்து வருவதை நம்மால் காண முடிகிறது. அனிருத் அவர்களின் இசையிலும், குரலிலும் சிவகார்த்திகேயன் அவர்களின் வரிகள் வெளிவர அரபிக்குத்து பாடல் சிறப்பாய் அமைந்தது. யூடியுப்பில் பல சாதனைகளை அரபிக்குத்து நிகழ்த்தி வருகிறது. இது மட்டும் அல்லாது பலரும் அரபிக்குத்து பாடலைக்கொண்டு ரீல்ஸ் செய்து மகிழ்ந்து வருகின்றனர்.

    vijay

    இப்படியாக அரபிக்குத்து பாடல் இணையத்தை கலக்கிக்கொண்டிருக்க, மற்றொருப்பக்கத்தில் தளபதி விஜய் அவர்களின் மற்றொரு திரைப்படத்தின் பாடல் யூடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்நிகழ்வை விஜய் இரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

    kutty story

    100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த அப்பாடலை பாடியவர், தளபதி விஜய்தான். ஆம்! தளபதி விஜய் அவர்கள் பாடி, அனிருத் இசையமைத்த குட்டி ஸ்டோரி பாடல்தான் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த பாடல். கடந்த வருடம் பொங்கல் வெளியிடாக வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலானது வெளிவந்த சமயத்திலேயே நன்கு வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக, குட்டி ஸ்டோரி படத்தின் பாடல் வரிக்கான காணொளி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. 

    vijay in audio launch

    தளபதி விஜய் அவர்கள் தனது திரைப்படங்களின் இசை வெளியிட்டு விழாக்களில் பேசியவற்றையும், கூறிய கதைகளையும் அடிப்படையாக கொண்டே குட்டி ஸ்டோரி பாடல் எழுதப்பட்டதாக குட்டி ஸ்டோரி பாடலின் பாடல் வரிகளை எழுதிய அருண்ராஜா காமராஜ் அவர்கள் தெரிவித்தது, குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    news

    60 சவரனா? 200 சவரனா? – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய வழக்கில் புதிய...

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 200 சவரன் வரை நகைகள் திருடு போனதாக புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது.  இயக்குநரும் பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வீட்டில் 60 சவரன் தங்க நகைகள்...