Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்என்னவனுக்காக எந்த எல்லைக்கும் செல்வேன்- அமெரிக்க பெண்

    என்னவனுக்காக எந்த எல்லைக்கும் செல்வேன்- அமெரிக்க பெண்

    கணவனின் மகிழ்ச்சிக்காக எந்த எல்லைக்கும் செல்வேன் என அமெரிக்க பெண் ஒருவர் கணவனுக்காகவே வாழ்ந்து வருவது பலரிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    இல்லற வாழ்க்கையில் பொதுவாக கணவன்-மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் உறவு நீடிக்கும் என்று சொல்வர். அந்த வகையில் அமெரிக்க பெண் ஒருவர் கணவனின் மகிழ்ச்சிக்காக எந்த எல்லைக்கும் செல்வேன் என கூறி வாழ்ந்து வருகிறார். 

    அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் 37 வயதான மோனிகா என்ற பெண். இவர் தன்னுடைய கணவர் ஜான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதையே முழுநேர சிந்தனையாக கொண்டு வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். 

    தனது கணவர் ஜானுக்காக சமைப்பது, வீட்டை பராமரிப்பது என எந்நேரமும் அவருக்காகவே வீட்டில் வேலைகளை செய்து வருவதால், ஜான் மற்ற பெண்களுடன் வெளியில் செல்வதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை என மோனிகா கூறியுள்ளார். தான் எந்த விதமான ஆடையை அணிய வேண்டும் என்பதை ஜான்தான் கூறுவார் எனவும், அப்படி அவர் சொல்வது தனக்கு பிடித்து இருப்பதாகவும் மோனிகா தெரிவித்துள்ளார். 

    தான் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை கணவன் பணிப்பதை சில பெண்கள் விரும்ப மாட்டார்கள். இருப்பினும், ஜான் அப்படி எல்லாம் சொல்வது எனக்கு பிடித்துள்ளது. அவர் சொல்வது போல் நானும் இருப்பது அவருக்கு மகிழ்ச்சியை கொடுப்பதால் அது எனக்கும் மகிழ்ச்சி தான் என மோனிகா கூறி இருப்பது பலர் இடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  

    பும்ராவுக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ள வீரர் – வெளிவந்த தகவல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....