Friday, March 24, 2023
மேலும்
    Homeஆன்மிகம்மகா சிவராத்திரி அன்று நம் செய்ய கூடாத ஐந்து விஷயங்கள்!!!

    மகா சிவராத்திரி அன்று நம் செய்ய கூடாத ஐந்து விஷயங்கள்!!!

    மகா சிவராத்திரி அன்று நம் மறந்தும் செய்யக்கூடாத விஷயங்கள் மற்றும் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் பற்றி இதில் பார்க்கலாம்.

    மகா சிவராத்திரி என்பது இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச அதாவது தேய்பிறையில் சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.

    sivan-image

    விரதம் மேற்கொள்ளும்போது: இந்த தினத்தன்று அதிகாலை குளித்து விரதத்தைத் தொடங்க வேண்டும். பின்னர், நண்பகல், மாலை என மூன்று வேளையும் குளித்து நம் உடல் மற்றும் மன தூய்மையுடன் விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

    அன்றைய தினம் முழுவதும் உணவு உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். வயதானவர்கள், உடல்நல கோளாறு கொண்டவர்கள் பால், பழம் அல்லது உப்பு சேர்க்கப்படாத உணவை உண்டு விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்.

    மகா சிவராத்திரி போது செய்ய வேண்டியவை:

    நடராஜர் பத்து, சிவ புராணம், கோளாறு பதிகம் படித்தல், லிங்காஷ்டகம், பரமசிவ ஸ்தோத்திரத்தை மற்றும் பஞ்சாட்சர ஸ்தோத்திரம் படிக்கலாம். அதோடு, திருமந்திரம் படித்தலும், பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்தல் மிக நல்லது.

    sivan

    மகா சிவராத்திரி போது செய்யக்கூடாதவை:

    பொய் பேசுதல், புறம் பேசுதல், சுக போகங்கள், தீய எண்ணங்கள் மற்றும் சிந்தனைகள் அனுபவிப்பது போன்ற ஐந்து விஷயங்களும் அறவே தவிர்க்க வேண்டும். மீறி இதுபோன்ற செயல்களை செய்வதால் விரதம் முறிவதோடு நமக்கு அதிகளவில் பாவம் வந்து சேரும்.

    அதுமட்டும் இல்லாமல், இரவில் கண் விழிக்க வேண்டும் என்பதற்காக, பகலில் உறங்கக்கூடாது. இந்த தினத்தில் மாமிசம், துரித உணவுகளை கண்டிப்பாக உண்ணக்கூடாது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    bombay jayashri

    பிரபல பாடகிக்கு மூளையில் ரத்தக் கசிவா? – வெளிவந்த தகவல்களால் அதிர்ச்சி..

    பிரபல பாடகி பாம்பே ஜெயஶ்ரீக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் கோமா நிலையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவின் முக்கிய பாடகியாக திகழ்ந்து வருபவர் பாம்பே ஜெயஶ்ரீ. கர்நாடக இசைக்கலைஞரான இவர் தென்னிந்திய...