Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்தாடி இல்லையெனில் வேலை இல்லையா? - மிரட்டும் புதிய விதிகள்!

    தாடி இல்லையெனில் வேலை இல்லையா? – மிரட்டும் புதிய விதிகள்!

    அண்டை நாடான ஆப்கானிஸ்தானில், தாலிபான்கள் ஆட்சி அமைந்ததன் பிறகு, அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் சென்று கொண்டிருப்பதை அனைவரும் அறிவர். கடினமான கட்டுப்பாடுகளால், பல உலக நாடுகள் ஆப்கானிஸ்தானை தனிமைப்படுத்தியுள்ள நிலையில், நாடு மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்நிலையில், பல நிதி அமைப்புகள் ஆப்கானிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்தியது.

    ஆப்கானிஸ்தானில், சில ஆண்டுகளாகவே பொருளாதார இழப்பு, வறட்சி, கொரோனா பரவல் மற்றும் ஆட்சி மாற்றத்தால் பல இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இங்கு, 2.4 கோடி அளவிலான மக்கள், உணவு பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டில், 97% மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், மக்கள் அண்டை நாடுகளில் குடிபெயர நினைத்தாலும், மரண தண்டனை விதிக்கும் அளவுக்கு கடுமையான சூழல் அங்கு நிலவுகிறது.

    இங்கு, ஆண்கள் குறிப்பாக மாணவர்கள், முடிவெட்டவே கூடாது என்றும், தாடி இல்லையெனில், அரசு வேலை பறிக்கப்படும் என்றும் அந்நாட்டை ஆளும் தாலிபான்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர். மாணவிகள் கண்டிப்பாக வகுப்பறையில், பர்தா அணிய வேண்டும் என்றும், நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் துணைத் தடுப்புக்கான அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானின் ஆட்சியை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதால், பெண்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. மேலும், திருமண விழாக்களில் இசை நிகழ்ச்சியை தடைசெய்தது மட்டுமல்லாமல், ஆண்கள் மற்றும் பெண்களை வெவ்வேறு அரங்குகளில் பங்கேற்க உத்தரவிட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள ஹெராத் மாகாணத்தில், துணிக்கடைகளில் விதிமீறல்களில் ஈடுபட்டவர்களின் தலைகளை துண்டிக்க தலிபான்கள் உத்தரவு பிறப்பித்ததாக, ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் காபூல் தெருக்களில் மீண்டும் நிகழத் தொடங்கியுள்ளன.

    உங்கள் மொழித்திரைப்படங்களை ஏன் இந்தியில் டப் செய்கிறீர்கள்?; காரசாரமாக உருவெடுக்கும் இந்தி பிரச்சனை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....