Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகாஷ்மீரின் இன்றைய நிலை : விளக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    காஷ்மீரின் இன்றைய நிலை : விளக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    காஷ்மீருக்கான சிறப்பு உரிமங்கள் ரத்து செய்யப்பட்டபின் அங்கு புதிதாக தொழில் தொடங்கி அதில் முதலீடு செய்யும் நிலை உருவாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.

    இந்தியாவின் முன்னாள் மாநிலமான ஜம்மு காஷ்மீர், கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது.

    இதற்காக ஆர்டிகிள் 370 தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் காஷ்மீருக்கு என்று இருந்த ஒரு சில சிறப்பு உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக மாறின. இந்த சட்டம் அக்டோபர் 31, 2019 ஆம் ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வந்தது. இதன் அடிப்படையில் ஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்கள் முதலீடு செய்ய முடியும் மற்றும் நிலங்களை வாங்கவும் விற்கவும் முடியும்.

    அதன்படி, இந்த 2022-23 ஆம் ஆண்டு வருடத்திற்கான பட்ஜெட் தொகையாக ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு 1.45 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது  என மக்களவையில் முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதனை ஆராய்ந்த மாநிலங்களவை இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

    அந்த பட்ஜெட் மசோதாவைத் தாக்கல் செய்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அப்பொழுது அவர் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம், அங்கு பிற மாநிலத்தவர்களுக்கான கட்டுப்பாடுகள் குறைந்து அங்கு தொழில் தொடங்கி முதிலீடு செய்யும் நிலை உருவாகி உள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

    மேலும், அங்கு தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தியத்தைப் பற்றி பேசிய அவர் அதன் புள்ளி விவரங்களைப் பற்றியும் விரிவாகக் கூறினார். இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு மட்டும் ஊடுருவல் 33 சதவீதமும், போர் ஒப்பந்த மீறல் 90 சதவீதமும், பயங்கரவாத நடவடிக்கைகள் 61 சதவீதமும், பயங்கரவாத கடத்தல்கள் 80 சதவீதமும் குறைந்துள்ளதாகப் பேசியுள்ளார். 

    அங்கு சென்ற ஆண்டு மட்டும் 142 உள்ளூர் மற்றும் 32 வெளிநாட்டு தீவிரவாதிகள் என 180 பேர் கொள்ளப்பட்டுள்ளதால், காஷ்மீரில் பயங்கரவாதம் அழிந்து அமைதி நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால், அங்கு முதலீடு செய்வதற்குத் தேவையான சூழ்நிலை உருவாக்கி உள்ளதைத் தெரிவித்து உள்ளார். அங்கு விரைவில், மத்திய அரசின் தொழில்துறை ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் தொழில்கள் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

    இதற்கு முன்னதாகப் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காஷ்மீரில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சியினர் ஆட்சியில் இருந்த போதுதான் காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்பட்டு, ஏராளமானோர் அம்மாநிலத்தை விட்டு வெளியேறினார் என்று குறிப்பிட்டிருந்தார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....