Sunday, March 17, 2024
மேலும்
    Homeசிறப்பு கட்டுரைஉலகை மயக்கிய சாக்லேட் இந்த உலகிற்கு வந்த கதை ! அவை குறித்த ரகசியங்கள் ஒரு...

    உலகை மயக்கிய சாக்லேட் இந்த உலகிற்கு வந்த கதை ! அவை குறித்த ரகசியங்கள் ஒரு பார்வை

    நம்மில் பலருக்கு டீ, காபி பிடிக்கும். இன்னும் சிலருக்கு கூல் drinks, ஐஸ்கிரீம் பிடிக்கும்… ஆனால் உலகில் இருக்கும் அனைத்து மக்கள்… ஏன்…! விலங்குகளுக்கு பிடித்த ஒரு சுவையான பண்டம் என்றால்…. அது சாக்லேட் தான் ! சாக்லேட் என்று சொன்னாலே நம்மில் பலருக்கு நாக்கில் எச்சில் ஊரும்..

    சாக்கலேட் என்பது மனிதர்கள் படைத்ததிலேயே சிறந்த படைப்பு என்று சொன்னால் கூட மிகையாகாது!

    சாக்லேட் இயற்கையாகவே மனிதர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கக்கூடிய serotonin ‘ எனப்படும் வேதிப்பொருளை மனிதர்கள் உட்கொள்ளும்போது சுரக்கிறது.

    பொதுவாக இந்த வேதிப்பொருள் மனிதர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிக்கும்போது சுரக்கும் என்பது அறிவியலில் கூறப்படுகிறது.

    இப்படி இயற்கையாகவே மனிதர்களுக்கு புத்துணர்ச்சியும் சந்தோஷத்தையும் தரக்கூடிய சாக்லேட் எப்படி இந்த உலகத்திற்கு வந்தது என்ற சுவாரசியமான வரலாற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

     

    சாக்லேட்டின் கதை 4,000 ஆண்டுகளுக்கு மெசோஅமெரிக்காவில் எனப்படும் இன்றைய மெக்சிகோவில் தொடங்கியது. இங்குதான் முதன் முதலில் கொக்கோ செடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. லத்தீன் அமெரிக்காவின் ஆரம்பகால நாகரிகங்களில் ஒன்றான ஓல்மெக் அதாவது மாயன்கள் முதன்முதலில் கொக்கோ செடியை புளித்த சாக்லேட் பானமாக மாற்றினர்.

    கி.மு 450 -ஆம் ஆண்டுகளில் மெக்ஸிகோ-வில் பேசப்பட்ட nahualt என்ற மொழியிலிந்து xocolate என்ற வார்த்தை வந்தது… அது காலப்போக்கில் சாக்லேட் என்று மாறியது.

    சாக்லேட் செய்ய பயன்படுத்தப்படும் கசப்பான கோகோ விதைகள் கடவுளிடம் இருந்து கிடைத்த பரிசாக அன்றைய மெக்ஸிகன் மக்கள் பெரிதும் நம்ம்பினர். அது உலகம் முழுவதும் பரவ தொடங்கி தொடங்கியது. முதன் முதலில் சாக்லேட் ஒரு பானமாக தான் பயன்படுத்த பட்டது.

    அதன் பிறகுதான் மெக்ஸிகோவின் வாழ்ந்த மாயன் மக்கள் அதை நாணயமாக மாற்றி பயன்படுத்தினர்.

    சாக்லேட் என்பது.. கோக்கோ பீன்ஸ் அல்லது Theobroma cacao எனப்படும் மரத்தின் விதைகளில் இருந்து தயாரிக்க படுகிறது.

    இந்த கோக்கோ பயத்தில் பொதுவாக 20 முதல் 60 விதைகள் இருக்கும். இந்த விதைகள் ஒரு முழு வடிவ சாக்லேட் -ஆகா மாற ” நொதித்தல் , வருத்தல் மற்றும் அரைத்தால் என பல்வேறு படிநிலைகளை கொண்டது.

    ஆரம்ப காலங்களில் சாக்லேட் என்பது குடிக்கக்கூடிய ஒரு பானம் மட்டுமே. இதன் சுவை மிக கசப்பாகவே இருக்கும்.

    அக்கால மக்கள் இந்த பானத்தில் மசாலா மற்றும் சோளம் கூழ் என சிலவைற்றை சேர்த்து ” chilate ” என்ற இரு பானத்தையும் குடித்து வந்தனர். இதை குடிப்பவர்களுக்கு மிகுந்த பலமும் புத்துணர்ச்சியும் வரும் என்று நம்பப்பட்டது.

    கி.பி 1519 ஆம், ஆண்டில் பேரரசர் அப்போதைய அமெரிக்க ஆஸ்டெக் பேரரசர் மான்டெஸ்மா…
    ஸ்பானிஷ் ஆராய்ச்சியாளரான ஹார்னன் கோர்ட்டெஸ் என்பவருக்கு இந்த xocolate’ எனப்படும் பானத்தை வழங்கினார்.

    அவர் ஸ்பானிஷ்-க்கு அந்த பானத்தை எடுத்து சென்று சர்க்கரை, வெண்ணிலா, லவங்கபட்டை சேர்த்து கூடுதல் சுவையை கொண்டுவந்தார்.

    அப்போது தொடங்கிய சாக்லேட் சாம்ராஜ்யம் இப்போது வரை உலகை ஆண்டு கொண்டு வருகிறது .

    கி.பி.1600 காலகட்டத்தில் ஸ்பானிஷ் நாட்டிலிருந்து இந்த சாக்லேட் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் மிகவும் பிரபலமானது.

    பிறகு கி.பி 1800-ம் காலகட்டத்தில் சாக்லேட் என்பது உலகின் பல இடங்களில் புழக்கத்திற்கு வந்தது.

    சாக்லேட் சுவைக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அடிமையாகி சுவைக்க ஆரம்பித்து விட்டனர்.

    இப்படியாக சாக்லேட் உலகம் முழுவதும் பரவி ‘ஒரு அன்பின் அடையாளமாகவே மாறிவிட்டது. இன்றைய உலகில் எந்த பண்டிகையும், கொண்டாட்டங்களும், சிறப்பு நிகழ்ச்சிகழும் இந்த சாக்லேட் இல்லாமல் இல்லை என்றே சொல்லலாம் !

    இது போன்ற சுவாரசியமான தகவல்களை அன்றாடம் அறிந்து கொள்ள தினவாசல் செய்திகளோடு இணைந்திருங்க மக்களே !

    இதையும் படிங்க: உருவாகிறதா ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம்? – இயக்குநர் சொன்ன பதில்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....