Friday, March 24, 2023
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதள்ளிப்போன புத்தகக் கண்காட்சி இம்மாதம் இந்த தேதியில்தான் நடைபெற உள்ளதாம்!

    தள்ளிப்போன புத்தகக் கண்காட்சி இம்மாதம் இந்த தேதியில்தான் நடைபெற உள்ளதாம்!

    கொரோனா கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து வந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட, கொரோனாவின் ஒமிக்ரான் காரணமாய் மீண்டும் கட்டுப்பாடுகள் இறுக்கி பிடிக்கப்பட்டது. உலக நாடுகள் பலவும் இதை பின்பற்ற, இந்தியாவும் பின்பற்ற தொடங்கியது. தமிழகத்திலும் ஒமிக்ரான் பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாய் உயர்ந்த வண்ணம் இருந்தன. ஆதலால் தமிழகத்தில் நடைபெறவிருந்த பல நிகழ்வுகள் தள்ளிப்போனது.

    அவற்றில் மிக முக்கியமான ஒன்றுதான், புத்தகக் கண்காட்சி. ஜனவரி 6 முதல் 23 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட புத்தகக் கண்காட்சி கொரோனா பரவல் காரணமாய் நிறுத்தி வைக்கப்பட்டது. இது பலருக்கு ஏமாற்றமாய் அமைந்தது.

    புத்தகக் கண்காட்சி1

    தற்போது கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்துள்ளதாலும், தமிழகத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டதாலும் புத்தகக் கண்காட்சி  நடைபெறுவது குறித்து பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கினர். அக்கேள்விக்கு பதிலாய் இன்று அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது.

    அதன்படி, சென்னையில் பிப்ரவரி 16 முதல் மார்ச் 6ஆம் தேதிக்குள் புத்தகக் கண்காட்சியை நடத்தத் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    dhanbad glider plane accident

    வீட்டின் மீது மோதிய விமானம்; ஜார்கண்ட் மாநிலத்தில் பரபரப்பு

    ஜார்கண்ட் மாநிலம், தன்பாத்தில் நேற்று வியாழக்கிழமை ஒரு வீட்டின் சுவர் மீது  சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.  ஜார்கண்ட் மாநிலம், தன்பாத்தில் நேற்று ஒரு வீட்டின் சுவர் மீது சிறிய ரக விமானம்...