Tuesday, March 19, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்ஃபேஸ்புக்கில் பயனர்களின் கணக்கில் இந்த அம்சத்தை ஆன் செய்ய வேண்டும் இல்லையெனில் கணக்கு முடக்கப்படும்!!!

    ஃபேஸ்புக்கில் பயனர்களின் கணக்கில் இந்த அம்சத்தை ஆன் செய்ய வேண்டும் இல்லையெனில் கணக்கு முடக்கப்படும்!!!

    ஃபேஸ்புக் பயனர்களின் கணக்குகள் ஹேக் செய்யப்படும் அபாயம் இருப்பதாக கூறி இந்த செய்தியை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    மெட்டா நிறுவனம் குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு மட்டும் எச்சரிக்கை இ-மெயில் ஒன்றை அனுப்பி வருகின்றனர். அந்த இ-மெயிலில் அனுப்பப்பட்ட பயனர்கள் உடனடியாக ஃபேஸ்புக் செட்டிங்கில் உள்ள புரொடக்ட் அம்சத்தை ஆன் செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் அவர்களுடைய கணக்கு முடக்கப்படும் என தெரிவித்துள்ளது.facebook users account protection

    முதலில் இந்த இ-மெயில் ஹேக்கர்களிடம் இருந்து வந்த போலி மெயிலாக இருக்கலாம் என பலரும் சந்தேகித்த நிலையில், பின்னர் உண்மையில் ஃபேஸ்புக்கில் இருந்து தான் அனுப்பப்பட்டது என அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.

    நீண்ட நாட்களாக பயன்படுத்தாதவர்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்பிருப்பதால், இவ்வாறு, இ-மெயில் மூலம் செய்தி அனுப்பி எச்சரிக்கை விடுக்கப்படுவதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் புரொடக்ட்டை ஆன் செய்வதன் மூலம் கூடுதல் பாதுகாப்பு அந்த கணக்குகளுக்கு வழங்கப்படும் என மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.

    facebook users account hacked

    குறிப்பாக, ஃபேஸ்புக்கில் பிரபலமாக இருக்கும் நபர்களின் கணக்கை நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருந்தால் அவர்களுக்கும் இந்த மெயில் அனுப்பப்படுகிறது. இதற்க்கான காரணம் அவர்கள் கணக்கை ஹேக் செய்வது மூலம் நீண்ட நபர்களை எளிதாக சென்றடையும் அபாயம் இருக்கிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....