Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஐபிஎல் தொடர்கள் ஒரு கண்ணோட்டம் : சாதனைகளும்!!! சோதனைகளும்!!!

    ஐபிஎல் தொடர்கள் ஒரு கண்ணோட்டம் : சாதனைகளும்!!! சோதனைகளும்!!!

    உலகளவில் நடைபெறும் தொழில்முறை தொடர்களில் முன்னிலை வகிக்கும் ஐபிஎல் தொடரின் 15வது சீசன் மார்ச் 26 ஆம் தேதி தொடங்குகிறது. இதுவரை பதினான்கு சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், இதுவரை கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம். 

    முதன் முதலாக 2008 ஆம் ஆண்டு தான் ஐபிஎல்-லின் முதல் சீசன் தொடங்கியது. பிசிசிஐ யால் நடத்தப்பட்ட இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக வீரர்கள் நிபந்தனைகளையோடு ஏலத்தில் விடப்பட்டனர்.

    இதன்படி ஏலத்தில் பெறப்பட்ட வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்ற பெயரில் இந்தியாவின் முக்கிய நகரங்களின் பெயரால் உள்ள அணிகளில் களமிறங்கினர்.

    பிறகு கொச்சி டஸ்கர்ஸ் மற்றும் புனே வாரியர்ஸ் என்ற இரு அணிகள் சேர்க்கப்பட்டன. பின்பு பல்வேறு காரணங்களால் அவ்விரு அணிகளும் ஐபிஎல்லில் விளையாட இயலாத சூழ்நிலை உருவானது.

    டெக்கான் சார்ஜர்ஸ் அணி உரிமம் மாறி சன் ரைசர்ஸ் ஹைதரபாத் என்று பெயர் மாறியது. பின்பு, சில அணிகள் தங்களுக்கேற்ற படி பெயர்களை மாற்றி வைத்துக் கொண்டன. 

    ஐபிஎல்லின் முதல் சீசன் 2008ல் ராஜஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 2009ல் டெக்கான் சார்ஜர்ஸும், 2010 மற்றும் 2011ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 2012ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸும், 2013ல் மும்பை இந்தியன்ஸும், 2014ல் மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸும் கோப்பையை கைப்பற்றின.

    2015ல் மீண்டும் மும்பை இந்தியன்சும், 2016ல் ஹைதராபாத் சன் ரைசர்ஸும், 2017ல் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2018ல் சென்னை சூப்பர் கிங்குசும், 2019 மற்றும் 2020ல் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2021ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கோப்பையை கைப்பற்றின.

    அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறையும் கோப்பையை கைப்பற்றியுள்ளன. 

    அதற்கு அடுத்தபடி, கொல்கத்தா அணி 2 முறையும், ஹைதரபாத், டெக்கான் மற்றும் ராஜஸ்தான் அணிகள் தலா 1 முறையும் கோப்பையை கைப்பற்றியுள்ளன. 

    சாதனைகள்:

    • இதுவரை நடந்த போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிய விராட் கோலி 6283 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். 
    • தனிநபர் அதிகபட்சமாக கிறிஸ் கெயில் 175 ரன்களுடன் முன்னிலை வகிக்கிறார். 
    • டேவிட் வார்னர் 50 அரைசதங்களும், கிறிஸ் கெயில் 6 சதங்களும் அதிகபட்சமாக அடித்துள்ளனர்.
    • அதிவேகமாக கே.எல் ராகுல் பஞ்சாப் அணி சார்பாக 14 பந்துகளில் டெல்லி அணிக்கு எதிராக அரைசதம் அடித்துள்ளார்.
    • அதிவேக சதமாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக கிறிஸ் கெயில் 30 பந்துகளில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக அடித்துள்ளார்.
    • அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வரிசையில் மும்பை அணிக்காக விளையாடிய லசித் மலிங்கா 170 விக்கெட்டுகளுடன் முதலிடம் பெறுகிறார்.
    • சிறந்த பந்துவீச்சாக மும்பை அணிக்காக அல்ஜாரி ஜோசப் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தியது அமைந்துள்ளது. 

    வருடா வருடம் புதிய சாதனைகளைப் படைத்துகொண்டே வரும் ஐபிஎல் போட்டிகள் இந்திய இளம் வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் களமாக அமைந்துள்ளது. இந்த ஆண்டில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் புதிதாக களமிறங்குகின்றன.

    இதன் 15வது சீஸனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்த வருடம் நடைபெறப்போகும் சாதனைகளைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இதையும் படியுங்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....