Tuesday, March 19, 2024
மேலும்
    Homeவாழ்வியல்பயணத்தின் போது தேவைப்படும் முக்கிய பொருள்கள் என்னவென்று தெரியுமா?

    பயணத்தின் போது தேவைப்படும் முக்கிய பொருள்கள் என்னவென்று தெரியுமா?

    நீங்கள் அதிக தூரம் பயணம் செல்பவரா? இல்லை அவ்வப்போது சுற்றுலா தளங்கள் செல்வபவரா? அப்படி என்றால் உங்களுக்காகத் தான் இந்தப்பதிவு. ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி பயணத்தின் போது நாம் சிலப் பொருட்களை மறந்து விடுவோம். அது வழக்கம் தான் ஆனால், சில முக்கிய பொருட்களை நாம் என்றும் மறக்கவே கூடாது. அப்படி அத்தியாவசியமான பொருள்கள் என்னனென்ன இருகின்றன என தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். 

    • முதலில் முக்கியமான ஒன்று தொலைத் தூரப் பயணங்களில் நாம் சில நாட்கள் தங்க வேண்டி வரும் என்பதால் உடுத்தும் உடை முக்கியப்பங்கு வகிக்கிறது. நீங்கள் செல்லும் இடத்தின் கால சூழ்நிலைப் பொறுத்து உடையை தேர்வு செய்வது நல்லது. குளிர், வெயில், மழை போன்ற முக்கிய காலநிலைகளுக்கு ஏற்ப தேர்வு செய்தால் அங்கு சென்று இருக்கும் போது வசதியாக இருக்கும். 
    • இரண்டாவது நாம் பயன்படுத்தும் பொருள்கள் அழகு சாதனப் பொருள்கள், சோப்பு, நீங்கள் குளிக்கும் போதும் குளித்த பின்பும் பயன்படுத்தும் பொருள்கள்  என முக்கியமான அனைத்து பொருள்களையும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். போகும் இடத்தில் நாம் பயன்படுத்தும் பொருள்கள் இல்லாமல் கூட போகலாம் ஆகையால் முன்னெச்சரிக்கையாக எடுத்து வைப்பது அவசியம். 
    • நாம் செல்லும் தூரத்தின் அளவைப் பொறுத்து தண்ணீர், தின்பண்டங்கள் சிலவற்றையும் வாங்கியோ அல்லது செய்தோ எடுத்துச் செல்வது நல்லது. காரணம் நாம் செல்லும் வழியில் சாப்பிடும் உணவு வகைகள் சுகாதாரமாக இருக்குமா என்பது தெரியாது. சுகாதரமாக இல்லை என்றால் என்ன செய்வது? சிலருக்கு இதனால் வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் கூட ஏற்படலாம். 
    • மிகவும் முக்கியமான ஒன்று நீங்கள் அன்றாடம் உட்கொள்ள வேண்டிய அல்லது பயன்படுத்தும் தைலம், ஸ்ப்ரே, போன்ற மருத்துவ ரீதியான மருந்து மற்றும் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுதல் மிக அவசியம்.
    • பெண்கள் தனியாக செல்லக் கூடியவர்களாக இருந்தால் பெப்பர் ஸ்ப்ரே, லிப்ஸ்டிக் வடிவில் உள்ள பிளாஷ் லைட், கூர்மையான பொருள் ஏதேனும்  போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளுதல் நல்லது, பெப்பர் ஸ்ப்ரே இல்லையென்றால் நம் வீட்டு மிளகாய்த் தூளைக் கூட பாட்டிலில் அடைத்து எடுத்து செல்லலாம். இது அனைத்தும் பெண்களின் தற்காப்புக்காக மட்டுமே. 
    • மேலும் நாப்கின்ஸ் போன்ற அத்தியாவசியாமான பொருள்களையும் பெண்கள் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. 
    • இதுவே ஆண்களாக இருந்தால் பிளாஷ் லைட்ஸ், மினுக்கும் வகையில் உடைகள் அணிவது போன்றவையும் அவசியம். அப்போது தான் தனியாக காட்டிலோ அல்லது தெரியாத இடத்தில் மாட்டிக்கொண்டால் கண்டுப்பிடிக்க ஏதுவாக இருக்கும். 
    • அடுத்து முக்கியப் பங்கு வகிப்பது நாம் உபயோகிக்கும் மின்னணு சாதனப் பொருள்கள், செல்போன், கேமரா, லேப்டாப் போன்றவையும் அதற்கான சார்ஜர் கேபிள்ஸ் என அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவது அவசியம்.
    • நீங்கள் செல்லப் போகும் இடம் சுற்றுலாத் தலமாக இருந்தால் காலை முதல் மாலை வரை சிறிது ஓய்வெடுக்கும் நேரம் கிடைக்கையில் அவ்வப்போது விளையாட, விளையாட்டு பொருள்கள் இருந்தால் எடுத்து வைத்துக் கொள்ளலாம். 
    • இவை அனைத்தையும் விட மிக முக்கியமானது முக கவசம் மற்றும் கைசுத்தப்படுத்திப்  பொருள்கள். இவை தான் தற்போது உள்ள நோய்த்தொற்றுக்  காலங்களில் நமக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கும்.
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....