Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு10,11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை நாளை வெளியீடு!!!

    10,11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை நாளை வெளியீடு!!!

    தமிழகத்தில் கொரோனாப்பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால், பொதுத்தேர்வுகளும் முறையாக நடத்தப்படவில்லை. கடந்த 2020-ஆம் ஆண்டு 1 முதல் 9 வரையிலான மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை.

    exam

    அதேபோல, 2021-ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்ததால் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் அரசால் நடத்த முடியவில்லை. பள்ளி மாணவர்களின் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியாகின. அந்த மதிப்பெண்களை வைத்தே கல்லூரிகளில் இந்தாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. எனினும், இந்த ஆண்டில் பொதுத்தேர்வு நடத்திட வேண்டும் என தமிழக அரசு தீர்க்கமாக இருக்கிறது.

    அதற்கான, 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, திருப்புதல் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் ஜனவரி மாதம் கொரோனா 3ஆம் அலை ஏற்பட்டதன் காரணமாக இந்த ஆண்டும் பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்கிற சந்தேகம் மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் எழுந்துள்ளது.

    அமைச்சர் அன்பில் மகேஸிடம்

    இதுதொடர்பாக, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸிடம் கேள்வியெழுப்பப்பட்டது. பேட்டிகளில் பேசிய அவர் “பொதுத்தேர்வு கட்டாயமாக நடத்தப்படும். ஏனென்றால், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டுவிட்டது. இனி இரண்டாம் டோஸும் விரைவில் செலுத்தப்படவுள்ளது. தற்போது, ஒமைக்ரான் பரவலும் குறைந்து வருவதால் அவர் உறுதியாக நடக்கும்” என்று கூறினார். அந்த வகையில் 10, 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை நாளை வெளியிட உள்ளதாக பள்ளிக்கல்வி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....