Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்பராமரிப்புகுழைந்த மனம் கொண்ட ஓநாயின் வாரிசு : சைபீரியன் ஹஸ்கி ஒரு சிறப்பு பார்வை!

    குழைந்த மனம் கொண்ட ஓநாயின் வாரிசு : சைபீரியன் ஹஸ்கி ஒரு சிறப்பு பார்வை!

    சைபீரியன் ஹஸ்கி இன நாய்கள், வேலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட நாய் இனங்கள் ஆகும். இவற்றின் பாரம்பரியம் ஸ்பீட்ஸ் இனத்தைச் சேர்ந்தது. இவை நன்கு திடமான தோலையும், சுற்றி நிறைந்த உரோமத்தினையும் கொண்டிருக்கும். 

    காதுகள் நிமிர்ந்த நிலையில் இருக்கும். பார்ப்பதற்கு அலாஸ்கன் மலாமுட்டே வகை நாய்களைப் போல இருக்கும். 

    இவை இயல்பாகவே கொஞ்சம் மதமதப்பு பிடித்த சோம்பேறி நாய்கள் ஆகும். ஆனால், இவற்றின் உண்மையான பலமே வண்டி இழுக்கும் போதும், மற்ற வேலைகளில் ஈடுபடும் சமயங்களில் தான் வெளிப்படும். இவற்றின் பின்புறத்தில் புசுபுசுவென்ற வால்பகுதி இவற்றிக்கு மேலும் அழகு. 

    இந்த வகை நாய்களை முதன் முதலாக உருவாக்கி பராமரித்து வந்தவர்கள் சைபீரியாவில் உள்ள சக்சி பெனிசுலாவில் வாழ்ந்த சக்சி மக்கள் ஆவர். அந்த மக்களால் 1908ஆம் ஆண்டு அலாஸ்காவில் உள்ள நோமிற்கு சவாரி செய்யும் பயனுக்காக கொண்டுவரப் பட்டன, இந்த வகை நாய்கள். பின்பு பந்தயங்களிலும் பயன்படுத்தப்பட்டன. இந்த நாய்கள் சார்ந்த மரபியல் ஆய்வில் சைபீரியன் ஹஸ்கி, அலாஸ்கன் மலாமுட்டே மற்றும் அலாஸ்கன் ஹஸ்கி போன்ற நாயினங்கள் சைபீரியாவின் சுஸோட்கா நாயினங்களுடன் மிக நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ளன. 

    ஐரோப்பாவில் காணப்படும் கனடிய எஸ்கிமோ நாயினம், இனுயிட் நாயினம், கிரீன்லாந்து நாயினம் போன்ற நாயினங்கள் சைபீரியன் ஹஸ்கி நாயினத்துடன் தான் மரபுகளை பகிர்ந்து கொள்கின்றன. 

    ஆர்டிக் பகுதியில் காணப்படும் நிறைய நாயினங்கள், குறிப்பாக சைபீரியன் நாயினம் வடக்கு ஆசியப்பகுதிகளில் காணப்பட்ட தைமூர் ஓநாய் இனங்களுடன் ஒத்து காணப்படுகின்றன. 

    சைபீரியன் ஹஸ்கி நாயினங்கள் பெரும்பாலும் குளிர் நிறைந்த பிரதேசங்களில் இருந்தே தோன்றின. அதனால், அவற்றின் தோல் கடும் குளிரினைத் தாங்கும் அளவில் அமைந்திருக்கும். இவற்றின் தோல் அமைப்பு இரண்டு அடுக்குகளைக் கொண்டது. இந்த தோல் அமைப்பு மூலம் அவற்றால் மைனஸ் 50 டிகிரி முதல் மைனஸ் 60 டிகிரி வரை குளிரினைத் தாக்குப்பிடிக்க முடியும். 

    ஆகையால், இவற்றால் வெப்பப்பிரதேசங்களில் வாழ்வது கடினம். அப்படி வளர்க்கும்போது குளிரூட்டப்பட்ட அறையில் வைத்து பேணிக்காப்பது அவசியம். அதிகளவு தண்ணீர் கொடுத்து பராமரிக்க வேண்டும். இந்த வகை நாயினங்களில் அதிகளவு முடிஉதிர்வு ஏற்படுவதால், அதனையும் தனிக்கவனம் எடுத்து பராமரிக்க வேண்டும். 

    பார்ப்பதற்கு ஓநாய்களைப் போலவே இருந்தாலும் இவை சாதுவான குணம் கொண்டவை ஆகும். இந்த வகை நாய்களில் இருவேறு நிறங்களில் கருவிழிகளைக் கொண்ட நாய்களுக்கு மதிப்பு அதிகம். குளிர்பிரதேசம் மற்றும் பனிசார்ந்த பகுதிகளில் இராணுவத்திலும், காவல்துறையிலும் இவ்வகை நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....