Friday, March 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்காங்கிரஸ் கட்சி, திமுகவுக்கு தலைமை தாங்க முடியாது; எதிர்கட்சி தலைவர் சிவா ஆவேசம்

    காங்கிரஸ் கட்சி, திமுகவுக்கு தலைமை தாங்க முடியாது; எதிர்கட்சி தலைவர் சிவா ஆவேசம்

    புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி, திமுகவுக்கு தலைமை தாங்க முடியாது என திமுக மாநில அமைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான சிவா கூறியுள்ளார்.

    புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ்தான் தான் புதுவையில் முதன்மையான கட்சி என்றும் மதசார்ற்ற கூட்டணி நடத்தும் போராட்டங்களுக்கு காங்கிரஸ் தான் தலைமை தாங்கும் என்று முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

    இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, எதிர்கட்சி தலைவரும், திமுக அமைப்பாளருமான இரா. சிவா கூறுகையில், காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்த நாராயணசாமி பேசியுள்ளார். எங்களை பொறுத்தவரை திமுக தலைமையின் முடிவு தான் எங்களோட கருத்து. எங்களுக்கு என தனி எண்ணம் கிடையாது. தமிழகத்தை போல புதுவையிலும் காங்கிரஸ் -திமுக உறவு நீடிக்கிறது. நாராயணசாமி கருத்துக்கு பதில் கூற விரும்பவில்லை.

    தமிழகத்தில் எங்கள் தலைமை அறிவிக்கும் போராட்டத்திற்கு புதுவையில் திமுகவே தலைமை ஏற்கும். தமிழகத்தில் திமுக தலைவர் அறிவிக்கும் போராட்டங்களை நாங்கள் தான் முன்னிலை எடுத்து நடத்துவோம். மற்ற போராட்டத்திற்கு நாங்கள் தலைமை ஏற்பதில்லை. காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில காங்கிரஸ் தான் தலைமை ஏற்றது. நாங்கள் பங்கேற்றோம். போராட்டத்திற்கும் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யாருடன் கூட்டணி, வேட்பாளர் குறித்தும் தமிழக முதல்வர் தளபதியார் அவர்கள் சொல்வார். எங்களுக்கு எந்த தனி சிந்தனையும் கிடையாது. புதுவை திமுக நிர்வாகிகளை ஒருங்கிணைத்து அரசுக்கு எதிராக மக்கள் பிரச்சனைகளை முன் வைத்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களோடு சேர்ந்து சில கட்சிகள் வருவார்கள்.

    எங்கள் கட்சி கொள்கை அடிப்படையில் நாங்கள் செயல்படுவோம். சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் அதிகமாக இருக்கிறோம். அனைத்து தொகுதிகளிலும் எங்கள் வேட்பாளர்கள் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் தோற்றுள்ளனர். புதுவை முழுவதும் திமுக வலுவான இயக்கமாக மாறி உள்ளது. நாங்கள் கட்சியை வளர்க்கிறோம். திமுக தலைவர் பெயரை சொல்லியும், கொள்கையை சொல்லியும் கட்சி நடத்துகிறோம். தலைமை உத்தரவுக்கு கட்டுப்படுவோம் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் காங்கிரஸ் சீட்டை பெற்றாலும் வெற்றி பெற செய்வோம்.

    தமிழகத்தில் மாண்புமிகு முதல்வர் தலைவர் அவர்களின் ஆட்சி சிறப்பாக உள்ளது. அதனை புதுவை மக்களிடம் சொல்லி பணியாற்றி வருகிறோம். இது அவர்களுக்கு கஷ்டமாக இருக்கலாம். ஆனால் எங்கள் கட்சி கொள்கை சொல்லித்தான் நாங்கள் கட்சி வளர்க்க முடியும். காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு தலைமை தாங்க முடியாது. எதிர்க்கட்சியாக திமுக தான் உள்ளது. கட்சி தலைமை எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவோம். இவ்வாறு கூறினார்.

    திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....